Posted by in Latest News
நுவரஎலியா மவூசாகல ஸ்ரீ சுமன சமன் தேவாலயத்திற்கு ஒரு சோடி யானை தந்தம் வழங்கப்படவூள்ளது. இன்று 2011.02.28 முற்பகல் 9.30 மணிக்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் வைபவம் இடம்பெறும். லக்ஷபான நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்கப்படும் நீர்மின்நிலையத்தின் நிர்மாண பணிகளுக்கு ஆசி வேண்டியே யானை தந்த பூஜை நடைபெறவூள்ளது. இதன்மூலமாக தேவையான மழைவீழ்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது. இலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கவேண்டும் என்பதே பூஜையின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சுமன சமன் தேவாலயம் இலங்கை மின்சார சபையினால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளதோடு சிவநொலிபாத பக்தர்களின் பூஜைக்குரிய இடமாகவூம் அது கருதப்படுகிறது.
இன்றைய விசேட வைபவத்தில் நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி லக்ஷபான நீர்மின் நிலையத்தின் பிரதி முகாமையாளர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொள்ளவூள்ளனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |