களுத்துறை தொடங்கொட பிரதேச செயலாளர் பிரிவில் 48 தோட்டப்புற குடும்பங்களுக்கு 70 இலட்சம் ரூபா செலவில் உத்தேச மின் விநியோக திட்டம் ஆரம்பம்……
04 0

Posted by  in Latest News

களுத்துறை தொடங்கொட பிரதேசத்தில் நாஇன்னஇ இதரலியவத்த பகுதியில் உத்தேச மின் விநியோக தி;ட்டத்திற்கான ஆரம்ப வைபவம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று 2011.02.26 இடம்பெற்றது. திட்டம் ஒரு மாதத்திற்குள் நிறைவூசெய்யப்படும்.
70 இலட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவூள்ள திட்டத்தினூடாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் பயன்பெறவூள்ளனர். இதுவரை காலமும் இருளில் இருந்த தமிழ் மக்கள் இதன்மூலம் ஒளியை பெறவூள்ளனர். தி;ட்டத்தினூடாக மக்களின் பொருளாதார மட்டம் வளர்ச்சியடையூம் என எதிர்பார்க்கப்படுகிறது.
துடுகல பிரதேசத்தில் அமைச்சர் உரையாற்றிய போது….
2012 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின் வசதி வழங்கப்படும். இதற்காக 30 ஆயிரம் ரூபா மின் வசதியற்றௌருக்கு கடனாக வழங்கப்படும். இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். தேங்காய்களுடன் மேடை ஏறுகின்றனர். தொலைக்காட்சி கெமராக்களுக்கு முன்னர் ஏதேதோ கதைக்கின்றனர்.
1977ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச அன்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக இருந்த போது குறைந்த விலைக்கு தேங்காய் தருவதாக வாக்குறுதியளித்தார். அது நடந்ததா? மேடைகளில் தேங்காவை காட்டுவதன் மூலம் விலை குறையூமா? தேங்காய் மற்றும் மரக்கறிகளின் விலை யாருடைய பிழை காரணமாகவூம் உயரவில்லை.
சிலர் இதை இறைவனின் தண்டனை என தெரிவிக்கின்றனர். அப்படியானால் அவூஸ்திரேலியாவில் வெள்ளம் வந்தது தண்டனையா? நியூசிலாந்தில் பூமியதிர்ச்சி ஏற்ப்பட்டதும் தண்டனையா? இவை அனைத்தும் இயற்கை அனர்த்தங்கள் அதை தடுக்க இயற்கை மீது அன்புகொள்ள வேண்டும். இதனால் மார்ச் 17 ஆம் திகதி சிறப்பாக சிந்தித்து தீர்மானம் எடுக்கவேண்டியது எமது பொறுப்பாகும்.

Leave a comment

* required