Posted by in Latest News
10 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மின்சார சபை 5 பில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று 2011.03.10 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டில் 40 பில்லியன் ரூபா நட்டத்தை நிவர்;த்தி செய்தே இலாபம் உழைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரியாக செலுத்தப்படவேண்டிய 2000 ரூபாவை செலுத்தவேண்டிய தேவை மக்களுக்கு ஏற்படவில்லை.
இது இ.மி.ச பெற்ற வெற்றி என்பதை விட மக்கள் பெற்ற வெற்றியாகும்.
இலங்கை மின்சார சபையால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவேண்டிய அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டதன் பின்னர் 2010 ஆம் நிதியாண்டில் நிகர இலாபமாக 5 பில்லியன் ரூபாவை உழைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதற்தடவையாக பெற்றௌலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படவேண்டிய குறித்த வருடத்திற்கான (2010 ஆம் வருட) கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் சில ஊடகங்கள் இலங்கை மின்சார சபையால் பெற்றௌலிய கூட்டுத்தாபனம் நட்டமடைவதாக செய்தி வெளியிட்டுள்ளன. 81 ரூபாவிற்கு விற்க்கப்படும் ஒரு லீற்றர் எண்ணெயை(Heavy fuel) 40 ரூபாவிற்கு இ.மி.ச பெறுவதால் பெற்றௌலிய கூட்டுத்தாபனத்திற்கு 50 வீத நட்டம் ஏற்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இ.மி.ச 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை (Heavy fuel) எண்ணெய் ஒரு லீற்றர் 26 ரூபாவிற்கு கொள்வனவூ செய்யப்பட்டது பெற்றௌலிய அமைச்சின் கோரிக்கையை அடுத்தே செப்டம்பர் முதலாம் திகதி முதல் ஒரு லீற்றர் எண்ணெய் 40 ரூபாவிற்கு கொள்வனவூ செய்யப்பட்டது. இது நிதியமைச்சு மேற்கொண்ட தீர்மானமாகும். அதேபோல் டீசல் சாதாரண சந்தை விலைக்கே கொள்வனவூ செய்;யப்படுகிறது.
பெற்றௌலிய உற்ப்பத்தியின் போது டீசல் பெற்றௌலின் கழிவூப்பொருளாகவே எண்ணெய் (Heavy fuel)) பெறப்படுகிறது. அது அனைத்து செயற்பாடுகளில் 38 வீதமாகும். குறித்த கழிவூ எண்ணெய்க்காக சபுகஸ்கந்தையில் மின் உற்ப்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க இ.மி.ச முன்வந்தது. பெற்றௌலிய கூட்டுத்தாபனத்திற்கு நன்மை ஏற்ப்படுத்தவே இது மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பெற்றௌலிய கூட்டுத்தாபனம் எண்ணெய்(Heavyfue) காரணமாக நட்டம் அடையவில்லை என்பது தௌpவாகிறது. நீண்டகாலமாக நிலவூம் பிரச்சனைகளே கூட்டுத்தாபனம் நட்டமடைய காரணமாகும்.
மேலும் 20090.12.31 ஆம் திகதி வரை இ.மி.ச பெற்றௌலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவேண்டிய 52 பில்லியன் ரூபாவை வழங்க திறைசேரி பொறுப்பேற்றுள்ளது.
இதற்கமைய 2010 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 5 பில்லியன் ரூபாவை இலாபம் ஈட்டியூள்ளமை உறுதியாகிறது.
உண்மை இவ்வாறிருக்க சில குழுக்கள் அமைச்சர்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்து பொறுப்புணர்வூடன் செய்திகளை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றௌம்.