Posted by in Latest News
கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஜப்பானில் பூமியதிர்ச்சி ஏற்ப்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியது. இதனால் ஏற்ப்பட்ட சுனாமி காரணமாக புகுஷிமா அணுஉலை பாதிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அணுசக்தி அதிகார சபை இன்று 2011.03.15 பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இடம்பெற்றது.
தற்போது தென்கொரியா அவசரகால நிலையயை அறிவித்துள்ளது. எனினும் சீனாஇ தாய்வான்இ ரஷ்யா உட்பட சில நாடுகள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தவில்லை. அணுஉலை வெடிப்பால் ஏற்ப்பட்ட அணுக்கசிவூ வளிமண்டலத்துடன் கலந்துள்ளது. அது காற்று செல்லும் திசையூடன் பயணிக்கும். ஜப்பானிலிருந்து பெசிபிக் சமுத்திரத்தினூடாக இலங்கையை காற்று வந்தடைவது மிகவூம் குறைவாகும் இதனால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை.
தற்போது இது தொடர்பாக சர்வதேச அணுமுகவர் நிலையம் நேரடி நிகழ்ச்சிகளை நடாத்துகிறது. அதில் இலங்கை சார்பாக அணுசக்தி அதிகார சபை தொடர்புகளை பேணி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக இலங்கைக்கு அணுத்தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்க அணுசக்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
போலியான மின் அஞ்சல் மற்றும் தகவல்களை நம்பவேண்டாமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. றறற.யைநய.ழசப என்ற இணையத்தளத்திலோ 2533449 என்ற இலக்கத்தின் ஊடாகவோ பொதுமக்கள் உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியூம்.
![]() |
![]() |
![]() |