நுரைச்சோலை அனல்மின் நிலையம் நாளை ஜனாதிபதி கரங்களால்…
21 0

Posted by  in Latest News

தேசிய அபிவிருத்தியை இலக்காக கொண்டு மஹிந்த சிந்தனையின் கீழ் குறிப்பிடப்பட்டவாறு இலங்கையின் முதலாவது அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகள் ஜனாதிபதியால் நாளை 2011.3.22 பிற்பகல் 5.30 க்கு திறந்துவைக்கப்படவூள்ளது. இதனூடாக தேசிய மின்சாரத்துடன் 300 மெகாவோல்ட் மின்சாரம் இணைக்கப்படவூள்ளது. 2012 ஆம் ஆண்டில் இலங்கையின் மின் தேவையை தன்னிறைவடைய செய்வதே இதன் நோக்கமாகும்.

2007 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகளுக்காக 455 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டதோடு 5300 மில்லியன் ரூபா தேசிய ரீதியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. தி;ட்டத்திற்கு சீன அரசாங்கம் சார்பாக சி.எம்.ஈ.சி (CMEC- china national mechinery and equipment import and export corporation) நிறுவனமாகும்.

புத்தளம் மின் நிலையத்தின் முதற்கட்டமாக 2010.11.17 ஆம் திகதி எரிபொருள் செயற்பாடு மின்நிலைய வளாகத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்த 80 குடும்பங்களுக்கு நுரைச்சோலை தலுவ பிரதேசத்தில் 20 பேர்சர்ஸ் காணி துண்டுகளை அங்கசம்பூர்ணமான வீடு நிர்மாணிக்கப்பட்டுஇ மின்சாரம்இ குடிநீர்இ பொதுபோக்குவரத்துஇ முன்பள்ளி உட்பட வீட்டுக்கு தேவையான தளபாடங்களும் ஏனைய வசதிகளும் வழங்கப்பட்டன. புத்தளம் கற்ப்பிட்டி பிரதான வீதி 40 அடியாக அகலப்படுத்தப்பட்டது. மேலும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் விவசாய பயிர்ச்செய்கைக்காக 2 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டது. நாளைய தினம் தேசத்திற்கு ஒளியூ+ட்டும் லக்விஜய மின்நிலையத்தின் ஊடாக மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வூ கிடைக்கும்.

நாளைய வைபவத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கஇ பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரஇ அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி. பெர்னான்டோஇ இலங்கைக்கான சீன தூதுவர் உட்பட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவூள்ளனர்.


Leave a comment

* required