300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு லக்விஜய மின் நிலையம் மூலம் இருண்ட யூகத்திற்கு முற்றுப்புள்ளி.
25 0

Posted by  in Latest News

பல வருடங்களாக உத்தேச திட்டமாகவே இருந்த புத்தளம் லக்விஜய அனல்மின் நிலையத்தின் நிர்மாண பணிகள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று 2011.03.21 ஜனாதிபதி நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவைத்தார்.
சுற்றாடலுக்கு பாதிப்பு என்ற போலியான கருத்தை முன்வைத்து முன்னைய அரசாங்கங்கள் திட்டத்தை முன்னெடுக்க பின்வாங்கின. எனினும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமைய அனல்மின் நிலையத்தின் முதற்கட்டத்தினூடாக 300 மெகாவோட் மின்சாரமும் இரண்டாம் கட்டத்தினூடாக 600 மெகாவோட் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றிய போது…
பல வருடங்களாக எதிர்பார்த்த வெற்றி இன்று எமக்கு கிடைத்துள்ளன. 2005 ஆம் ஆண்டிலிருந்து எமது நாட்;டு மக்கள் வெற்றி செய்திகளையே கேட்கின்றனர். அதில் லக்விஜய அனல் மின் நிலையத்தின் வெற்றி மிகச்சிறந்ததாகும். நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால் நாட்டு மக்கள் அபிவிருத்தியடைய வேண்டும். மக்களை அபிவிருத்தியின் பக்கம் செலுத்தும் பாதையாக மின்சக்தி உள்ளது. மின்சக்தி நாட்டில் உள்ள மிகப்பெரிய பலமாகும். அது நாட்டிற்கு உயிரூட்டக்கூடியது. மின்விநியோகத்தை வழங்குவது பௌத்த மதத்தில் குறிப்பிட்டதைப்போன்று கண் தெரியாதவர்களுக்கு வழிகாட்டும் செயலாகும்.
முன்னர் இருந்த ஆட்சி நிறுவாகங்கள் தேர்தலை கருத்திற்கொண்டு அனல்மின் நிலையத்தை முன்னெடுக்கவில்லை. எனினும் மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எந்தவொரு கடினமாக தீர்மானத்தை மேற்கொள்ளவூம் நாம் தயார். இதனால் பாரிய எதிர்ப்புக்கு மத்தியிலும் மின்நிலையத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை போன்றே மேல் கொத்மலைஇ புரொட்லன்ட் ஆகிய மின் நிலையங்களையூம் மக்களுக்கு பரிசாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் 24 மணிநேரமும் மின் விநியோகத்தை வழங்கும் நாடு இலங்கையாகும்.
வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க….
நாட்டின் மின் நெருக்கடிக்கு தீர்வாக இத்திட்டம் அமைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை திட்டம் பந்தைப்போன்று அங்குமிங்கும் மாறியது எனினும் தூர நோக்கம் கொண்ட ஜனாதிபதியின் தலைமையின் கீழ் திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தமை வரலாற்று சிறப்பம்சமாகும்.
யூத்தத்தால் பெற்ற வெற்றியை மேலும் பலமூட்டும் விதத்தல் லக்விஜய மின் நிலையம் முக்கியமானதாக அமைந்துள்ளது. சில காலம் நாடு இருளில் மூழ்கியது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் மேலும் 600 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படும். இதன்மூலம் எதிர்காலம் இருண்டயூகமாக மாறுவதை தடுக்க முடியூம். இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
நட்டத்தில் இயங்கிய இலங்கை மின்சார சபை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து நீங்கி வருகிறது. லக்விஜய மின்நிலையம் இலங்கை மின்சார சபை புதிய பயணத்திற்கான ஆசிர்வாதமாகும். குப்பி விளக்குகளுக்கு விடைகொடுக்க கிராம மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எதிர்காலத்தில் குறைந்த செலவில் மாற்று சக்திகளைக்கொண்ட மின் உற்ப்பத்தி செய்ய தி;ட்டமிடப்பட்டுள்ளது. தற்போது காற்று சூரியசக்திஇ கடலலை ஆகியவற்றை பயன்படுத்தி மின் உற்ப்பத்தி செய்யப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் நாட்டை அபிவிருத்தி செய்ய மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு முக்கியமானது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்

Leave a comment

* required