இ.மி.ச நிதி நிர்வாகத்தை பலப்படுத்த சர்வதேச (CIMA) நிறுவனத்தின்உதவி.
31 0

Posted by  in Latest News

மின்சக்தி அமைச்சின் கீழுள்ள இலங்கை மின்சார சபை உட்பட அனைத்து நிறுவனங்களதும் நிதிநிர்வாகத்தை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படுமென (CIMA) நிறுவனத்தின் சர்வதேச தலைவர் ஜோர்ஜ் கிளாஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவூடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே கிளாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் மின்சக்தி துறையின் நிதிர்வாகம் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவூம்  அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது (CIMA) நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிரெட்லி எமர்சன் கருத்து தெரிவிக்கையில் இ ஊஐஆயூ பாடத்திட்டத்தின் வெளிநாட்டு புலமைப்பரிசில்களை பொறியியல் மாணவர்களே  வெற்றிகொள்வதாக தெரிவித்தார். 2010 ம் நிதியாண்டுக்காக இலங்கை மின்சார சபை பெற்ற வெற்றி சிறப்பானது எனவூம் அவர் தெரிவித்தார். மனித வள முகாமைத்துவம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்துவது தொடர்பில் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் செயற்பாடுகளை கணிக்கும் (டீயடயnஉந ளஉழசநஉயசன ) செயற்திட்டம் தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் செயற்பாட்டுத்திறனை வளர்க்க முடியூமென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

* required