Posted by in Latest News
அன்று சரியான தீர்மானம் எடுக்கப்பட்டிருச்தால் இன்று மின்சக்தி துறை பாரிய நன்மைகளை பெற்றிருக்கும்.
மின்சக்தி துறையில் கடந்த காலங்களில் சரியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இன்று முகங்கொடுக்க வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (2011.04.05) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஊழியர்கள் கலந்துகொண்ட பயிற்சித்திட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பாகவூம் அமைச்சர் விளக்கினார். இலங்கை சூரியசக்தி அதிகார சபை பயிற்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அரச மற்றும் தனியார் ஊழியர்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் பயிற்சித்திட்டத்தின் மூன்றாம் கட்டமே நேற்று இடம்பெற்றது. இதற்கு முன்னர் உலக வர்த்தக மையம் மற்றும் இரத்த வங்கி ஆகியவற்றில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாம் அனைவரும் குறைந்த மின்கட்டணத்தை செலுத்தவே எதிர்பார்க்கின்றௌம். எனினும் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மின்கட்டணத்தை செலுத்துவது கடினமான காரியமாக மாறியூள்ளது. இருப்பினும் மின் கட்டணத்தை குறைக்கும் திறமை நுகர்வோர் கையிலுள்ளது. மின்சாரத்தை வீண் விரயமின்றி பயன்படுத்துவன் மூலம் பாரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியூம். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை ஏற்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பயிற்சித்திட்டத்தில் 150 ற்கும் அதகமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |