அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு அமைச்சர் பாராட்ட
07 0

Posted by  in Latest News

மக்கள் பணத்தை வீணடிக்கும் அரச நிறுவனமாக இ மி ச மீதுள்ள குற்றச்சாட்டை மாற்றியமைக்க ஊழியர்களின் அர்;ப்பணிப்பின் மூலம் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கடனற்ற நிறுவனமாக இ மி சவை மாற்றியமைக்க சம்பிரதாய நிர்வாக முறையிலிருந்து விடுபட்டு புரிந்துணர்வை அதிகரிப்பதற்காக விசேட கலைநிகழ்;ச்சியொன்று அண்மையில் பத்தரமுல்லையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்றது.
ஊழியர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக இது அமைந்தது. கலை மனிதனை வளப்படுத்தும். சிறந்த தலமைத்துவம் கொண்ட சுகதேகி மக்களை உருவாக்க விளையாட்டு உதவூகின்றது. அறிவூஇ ஆற்றல் இ திறமை நிறைந்த மக்கள் கௌரவிக்கப்படுவர். அதை அடிப்படையாக வைத்து இ மி ச ஊழியர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்காக கலைவிழாவிற்கு மேலதிகமாக விளையாட்டு விழாவூம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ மி ச  தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் எந்தவொரு நிறுவனமும் முன்னேற முடியாது. இ மி ச ஊழியர்கள் தமது நிறுவனத்தை உயிர்போன்று பாதுகாப்பதால் பல வருட கடனிலிருந்து நிறுவனத்தை காப்பாற்ற முடிந்தது. நிறுவனம் பெற்ற வெற்றி தற்காலிக வெற்றியாகயன்றி நிறந்தர வெற்றியாக ஊழியர்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமைச்சர் பாட்டலி சம்பி;க்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment

* required