ப்பான் புகுஷிமா அணுஉலை வெடிப்பால் இலங்கைக்கு பாதிப்பா….?
08 0

Posted by  in Latest News

ஜப்பானில் ஏற்ப்பட்ட பூமியதிர்ச்சியினால் புகுஷிமா அணுஉலை வெடித்ததில் இலங்கைக்கு பாதிப்பு உள்ளதாக என்பது தொடர்பில் கண்டறிய இலங்கை அணுசக்தி அதிகார சபை கதிரியக்க ஆய்வூகளை மேற்கொள்ளவூள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று 2011.04.07 அணுசக்தி அதிகார சபையில் இடம்பெற்றது.
புகுஷிமா அணுஉலை வெடிப்பினால் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த மக்களுக்கு கதிரியக்க பாதிப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளதாக என்பது தொடர்பாக அணுசக்தி அதிகார சபை மேற்கொண்ட ஆய்வூகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் இலங்கைக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
ஜப்பானில் புகுஷிமா அணுஉலை வெடித்ததை அடுத்து மார்ச் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை ஜப்பானிலிருந்து இலங்கைக்கு 215 பேர் வரை வருகை தந்துள்ளனர். அவர்கள் கதிரியக்க தாக்குதலுக்கு உட்படவில்லை என அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 5 பொருட்களின் மாதிரிகள் ஜப்பான் வாகனங்கள் அடங்கிய 4 கப்பல்கள் உட்பட இலங்கையின் கொட்டகல தம்புல்ல மற்றும் ஹொரனை ஆகிய பிரதேசங்களில் உற்ப்பத்தி செய்யப்படும் பால்வகையூம் 13 வாயூக்களும் 33 மாதிரியான நீர்களும் பரிசீலிக்கப்பட்டன. அவை எவ்வித தாக்கத்திற்கும் உட்படவில்லை என தெரியவந்துள்ளது.
இதற்கமைய புகுஷிமா அணுஉலை வெடிப்பால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ஊர்ஜிதமாவதாக அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a comment

* required