தேசிய மட்ட விளையாட்டு வீரர்கள் இ.மி.ச விற்கு இணைத்துகொள்ளப்படுவர்
28 0

Posted by  in Latest News

இலங்கை மின்சார சபை பல வருடங்களுக்கு பிறகு நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக ஸ்த்திரத்தன்மையை அடைந்துள்ளது. எதிர்காலத்தில் கலை மற்றும் விளையாட்டு துறைகளில் உயர் நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற( 2011.04.28) ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை மூலம் திறமையூள்ள வருமானம் குறைந்த வீரர்களின் பொருளாதாரத்தை வளப்படுத்த தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவூள்ளன. இதன்மூலம் நாட்டின் விளையாட்டுத்துறையை முன்னேற்ற முடியூம். தொழில்வாய்ப்புகளை வழங்குவது சமூக அநுகூலத்திற்கான சிறந்த மூலதனமாகும். மெய்வல்லுநர் விளையாட்டு வீரர்களைப் போன்று கரப்பந்தாட்டம்இ கூடைப்பந்து மற்றும் கெரம் விளையாட்டு வீரர்களுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும். 10 வருடங்களுக்கு பிறகு இ.மி.ச நடத்திய விளையாட்டு போட்டிகளில் அதிகாரிகளும் பணியாளர்களும் பராபட்சமின்றி கலந்துகொண்டனர்.
இத்திட்டம் மின்சார சபை ஊழியர்களின் சுகாதார நலனையூம் அதிகரிக்குமென சபையின் தலைவர் வித்யா அமரபால தெரிவித்தார்.
அமைச்சரின் திட்டத்திற்கு அமைய செயற்த்திட்டத்தின் ஆரம்ப வைபவம் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய விளையாட்டு வீரர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

* required