மின்சக்தி அமைச்சில் புதுவருட கொண்டாட்டம்.;…..
30 0

Posted by  in Latest News

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த புதுவருட கொண்டாட்டம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கொழும்பு 7 துரஹ தரஹ மைதாhனத்தில் நடைபெற்றது. அமைச்சின் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் வைபவத்தில் கலந்துகொண்டனர்.
100 மீற்றர் ஓட்டப்போட்டி இ பாடல்இ கதைசொல்லுதல்இ முட்டி உடைத்தல்இ கயிறிழுத்தல் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சிறுவர்களுக்கான விசேட போட்டிகளும் அதில் இடம்பெற்றன.
அமைச்சின் அதிகாரிகளின் நலன்புரி விடயங்களுக்காக பல்வேறு திட்டங்கள் நலன்புரி சங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றன. ஊழியர்களின் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட விளையாட்டுப் போட்டிகளில் தராதரம் பார்க்காது அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பரிசில்களை வழங்கி வைத்தார்.

Leave a comment

* required