Posted by in Latest News
நம் அனைவரதும் எதிர்பார்ப்பான மின் கட்டணத்தை குறைக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் மின் கட்டணங்களை குறைக்கும் திறமை அதன் பாவனையாளர்களிடமே உள்ளது. மின்சாரத்தை வீண் விரயமின்றி பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டணம் குறையூம். இதனூடாக நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவ முடியூமென மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இலங்கை சூரிய சக்தி அதிகார சபையில் இடம்பெற்ற பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இ;வ்வாறு தெரிவித்தார். அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை இலக்காக கொண்டு பயிற்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மின்சக்தியை சேமிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய தனிப்பட்ட லாபங்கள் தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
பயிற்சித்திட்டத்தில் இலங்கை வங்கியின் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதற்கு முன்னரர் உலக வர்த்தக மையத்தின் ஊழியர்கள் உட்பட சில நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மின்சக்தி துறை தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய உரிய தீர்மானங்கள் உரிய காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்று மின்சக்தி துறை எதிர்நோக்கியூள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வூ கண்டிருக்க முடியூமென அமைச்சர் தெரிவித்தார். எவ்விதமான பிரச்சினைகள் நிலவிய போதிலும் ஆசிய பிராந்தியத்திலுள்ள நாடுகளில் 24 மணிநேரமும் மின்சாரத்தை விநியோகிக்கும் ஒரே நாடு இலங்கையாகும். இந்தியாவில் 6 முதல் 7 மணித்தியாலங்களும் இ நேபாளத்தில் 16 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலில் உள்ளது. இவ்வாறான நிலையில் எமது நாடு மின்விநியோகத்தில் முன்னிலையிலுள்ளது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |