வடகிழக்கு மின்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய செக்கோஸ்லாவியா கடனுதவ
03 0

Posted by  in Latest News

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இ செக்கோஸ்லாவியா பிரதி வெளிவிவகார அமைச்சர் தோமஸ் டப்பிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நேற்று (2011.06.02) மின்சக்தி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு கிழக்கிலுள்ள மின்சார கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்காக 30 மில்லியன் ய+ரோக்களை கடனாக வழங்க செக்கோஸ்லாவியா பிரதி வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். மொனராகலை இ பொலன்னறுவைஇ மற்றும் பட்டிருப்பு ஆகிய பிரதேசங்களில் உப மின் நிலையங்களை அமைத்து மின்கட்டமைப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2012 ம் ஆண்டில் அனைவருக்கும் மின்சாரத்தை வழங்க பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இளம் 30 பொறியியலாளர்கள் இ அடங்கிய குழு அணுத்தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சிகளை பெறவூள்ளது. செலவூகூடிய மின் உற்பத்தியிலிருந்து விடுபட்டு குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்iயின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கைக்கான செக்கோஸ்லாவிய தூதுவர் மிலோஸ்லேவ் ஸ்டெசெக் இ செக்கோஸ்லாவியாவின் இலங்கை தொடர்பான நடவடிக்கை பிரதிநிதி என்ரியா குசரோவா இ அமைச்சின் மேலதிக செயலாளர் இலங்கை சூரியசக்தி அதிகாரசபையின் தலைவர் இ அணுசக்தி அதிகார சபையின் தலைவர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required