Posted by in Latest News
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவர் உட்பட பணிப்பாளர் சபை இன்று (2011.06.09) முற்பகல் சுபவேளையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்னிலையில் பணிகளை ஆரம்பித்துள்ளது. இ மி ச வரலாற்றில் அதன் தலைவரும் இ பொதுமுகாமையாளரும் ஒரே நேரத்தில் பணிகளை ஆரம்பித்தது இதுவே முதற்தடவையாகும்.
இ மி ச தலைவராக பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். பேங்கொக் மஹிடோல் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை கற்ற அவர் இங்கிலாந்து லிவர்ப+ல் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றார். களனி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ராகம வைத்திய பீடத்தின் பிரிவூ ஒன்றின் தலைவராகவூம் கடமையாற்றிய அவர் மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் அணுசக்தி அதிகார சபை ஆகியவற்றின் தலைவராகவூம் செயற்பட்டுள்ளார்.
இ மி ச உபதலைவராக அநுர விஜேபால தெரிவூசெய்யப்பட்டுள்ளார். அவர் 1991 ம் ஆண்டு மொரட்டுவை பல்கலைக்கழத்தில் மின் பொறியியல் பட்டத்தை பெற்றவர். 30 வருட காலமாக மின்சார துறையில் பணியாற்றியூள்ளார். அவர் 2005 ம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மின் பொறியியல் பிரிவின் சிரேஷ்ட விரிவூரையாளராகவூம் கடமையாற்றியூள்ளார்.
இ மி ச பொது முகாமையாளராக நிஹால் விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 30 வருட காலமாக இலங்கை மின்சார சபையில் பணியாற்றியூள்ளார். மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர் பேங்கொக் ஏ ஐ டி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று 1977 ம் ஆண்டு மின் பொறியியலாளராக இ மி சவில் இணைந்தார். அவர் இ மி சவில் பிரிவூ ஒன்றின் சிரேஷ்ட மேலதிக பொதுமுகாமையாளராகவூம் கடமையாற்றியூள்ளார்.
இ மி சவின் செயற்பாட்டு பணிப்பாளராக பசன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளரான அவர் 1987 ம் ஆண்டு கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டப்பட்டம் பெற்றவராவார்.
வைபவத்தில் பிரதியமைச்சர் பிரேம்லால் ஜயசேகர இ அமைச்சின் ஆலோசகர் உட்பட மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இதேவேளை அணுசக்தி அதிகாரசபையின் புதிய தலைவராக ரஞ்சித் லக்ஷ்மன் விஜேவர்தன இன்று சுபமுகூர்த்தத்தில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார். அவர் பேராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஸ்டேர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவராவார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |