Posted by in Latest News
மின்சக்தியை பாதுகாக்கும் நோக்கத்துடன் மின்சக்தி அமைச்சு மேற்கொள்ளும் திட்டத்தில் மற்றுமொரு கட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. கெஸ்பேவ பிரதேசத்திலுள்ள சமூர்த்தி உதவி nறும் குடும்பங்களுக்கு சி எப் எல் மின்குமிழ்களை வழங்கும் வைபவம் இன்று (2011.06.10) அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் மேல் மாகாண உறுப்பினர் சமிந்த சில்வா 7 லட்சம் ரூபா நிதியை இதற்காக ஒதுக்கியிருந்தார். மின்குமிழ்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
வைபவத்தில் அமைச்சர் உரையாற்றும் போது………
தற்போது நாட்டில் 90 வீதம் மின் விநியோகிக்கப்படுகின்றது. 2012 ம் ஆண்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இ அனைத்து மத ஸ்தலங்களுக்கும் இ அனைத்து வீடுகளுக்கும் மின் விநியோகிப்பதே எமது நோக்கமாகும்.
மின்சாரத்தை வீ;ண் விரயம் செய்யாமல் பயன்படுத்துவது தொடர்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மின்கட்டணத்தை குறைக்க முடியூம். குறைந்த விலையில் மின்சாரத்தை பெற்ற யூகம் முடிவடைந்துள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்க வேண்டும். 2011 ம் ஆண்டு டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டிலுள்ள அனைத்து கஷ்ட பிரதேசங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்கப்படும். இதன் மூலம் கிராமங்களில் பயன்படுத்தப்படும் குப்பி விளக்குகளுக்கு விடுதலை வழங்கப்படும்.
வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர் ஏ எச் எம் பௌசி இ மேல் மாகாண சபை உறுப்பினர் சமிந்த சில்வா உட்பட பலர் கலந்துகொண்;டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |