அனுராதபுர மாவட்டம் 81மூ மின்சாரத்தால் நிறைவூ பெற்றுள்ளது.
14 0

Posted by  in Latest News

பொசன் உற்சவத்திற்கு இனையாக அநுராதபுர மாவட்டத்தில் மஹாஹல்மிம்ம வெவ கல்கந்தேகம கெலேகிரிஜபனை கலுகலயான 1 மற்றும் உடகொரஸ்ஸகல்ல மின் செயற்திட்டம் மக்களின் நலனுக்காக திறந்திருக்கும். 361 குடும்பங்களுக்காக மின்சக்தி எரிபொருள் துறை அமைச்சு 84 மில்லியன் ரூபா முதலீடு.

மின்சாரம் திறப்பு விழாவில் கலற்துக்கொண்ட அமைச்சர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார். கமனியங்கம மின்சாரத்தில் போசிக்கப்படுவது ரூபவாஹினியில் ஒளிபரப்பப்படும் நாடகங்கள் ரியாலிடி என்ற நிகழ்ச்சி கிரிக்கட் சுற்றுப்பொட்டி மற்றும் விநோத நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதற்காக அல்ல நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் குழந்தைகளின் அறிவினை வளர்க்கும் ஒரு ஒளியாவதற்கே கிராமத்தில் சிறு சிறு கைத்தொழில்கள் வியாபாரங்கள் சிறு மற்றும் மத்திய பரிமான வியாபாரங்களாக மாற்றப்படுவதற்கு நாட்டின் பொருளாதாரத்தினை உறுதிப்படுத்தி கொள்வதற்கு தேவையான பங்களிப்பை வழங்குவதற்கே ஆகும்.

அநுராதபுர மாவட்டத்தில் காட்டடு யானைகளின் தொல்லைகள் பெரிதும் காணப்படுகின்ற கஷ்ட பிரதேசங்கள் 5 ஐ பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மின்வழங்கும் திட்டம் ஒன்றினை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். இவற்றுள் எலேபத்துவ எஹெடுவெவ பிரதேசங்களுக்காக அமைக்கப்படவூள்ள மஹா அல்மிவ்வேவெவ மின்மாற்று இயந்திரத்தினையூம் அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இதற்காக அரசாங்கம் 78 இலட்சம் முதலிட்டுள்ளது மேலும் 75 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

குல்கந்தேகம பிரதேசத்தில் 63 குடும்பங்களுக்காக மின்சாரத்தினை பெற்றுக்கொடுக்கும் வைபவம் விவசாய சேவைகள் அமைச்சர் எஸ்.எம்.சந்தசேன தலைமையில் நடைபெற்றது. தங்களின் பொருளாதார சமுக நிலைமையினை உயர்த்துவதற்காக மின்சாரத்தினை வழங்குவது பெரும் ஊக்குவிப்பு என பிரதேச மக்கள் குறிப்பிடகின்றனர்.

இங்கு காணப்படும் அதிகஷ்ட பிரதேசமான கெலே திறப்பனையில் 45 குடும்பங்களுக்காக மின்சார திட்டமொன்று அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் 132 குடும்பங்களுக்காக கலுகலாய 1 மின்சார வேலைத்திட்டம் மற்றும் 61 குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்ட உடகொரஸ்ஸகல்ல மின்செயற்திட்டமும் அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் மாகாணசபை அமைச்சர் வீரசேன கமகே அவர்கள் மற்றும் இளைஞர் விவகார மற்றும் தேர்ச்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

அநுராதபுர மாவட்டத்தில் 81மூமாக காணப்படுகின்ற மின்னினைப்புக்கள் 2012ஆகும் போது 100மூமாக ஆக்கும் நோக்கத்துடன் இலங்கை மின்சார சபை சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட அரசியல் அதிகாரிகள்செயற்படுகின்றனர் விஷேட கலந்துரையாடலொன்று மின்சக்தி எரிபொருள் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் அநுராதபுர பிரதேச செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் மாகாணசபை முதல்வர் பாh;டி பிரேமலால் திசாநாயக்க இளைஞர் விவகார மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி பிரதி அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த வடிகாலமைப்பு மற்றும் நீர் வழங்கள் முகாமைத்துவ பிரதியமைச்சர் டப்ல்யூ.பீ .சேமசிங்க ஆகியோர் உட்பட மாவட்ட செயலாளர் பேராதெனிய பிரதேச மற்றும் மாகாண பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

இங்கு வடமத்திய மாகாணத்தின் சகல கமநியங்கம மின்சார திட்டத்தில் செயற்படுத்தப்பட்ட விதுலமு லங்கா செயற்திட்டத்திம் தொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் கருத்துதெரிவிக்கப்பட்டதுடன் மாவட்ட அரசியல் துறை சார்ந்தவர்களால் பிரதேசத்தில் செயற்படுத்தப்பட்ட மின்சார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து மதிப்பீடு நடைபெற்றது.

2011ம் ஆண்டு ஜூன் மாதம் ஆகும் போது அநுராதபுர மாவட்டத்தில் 20மின்சார செயற்திட்டங்கள் மக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் இதனுhடாக 1568 குடும்பங்கள் நன்மையடைகின்றன.இதற்காக 185.9மில்லியன் ரூபாவினை மின்சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சு முதலீட்டுள்ளது.

Leave a comment

* required