Posted by in Latest News
இலங்கையின் எரிசக்தி முறை தொடர்பாக கொரிய அரசாங்கம் பாராட்டு
அன்றாட மின்சக்தி தேவைக்கு மாற்று திட்டங்களை பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இ கொரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று (2011.06.16) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் மின்சக்தி துறையின் செயற்பாடுகள் தொடர்பாக கொரிய அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. துறைசார் அபிவிருத்திக்கு 16 மில்லியன் அமெரிக்க டொலரை வழஙூற்கவூம் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 ம் ஆண்டு இலங்கை முழுவதும் இ மின்விநியோகத்தை செயற்படுத்தும் திட்டத்திற்காக கொரிய அரசாங்கம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
கொரிய அரசாங்கத்தின் ‘கொய்கா”திட்டத்தினூடாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் சூரியசக்தி மின்நிலையத்தின் முன்னேற்றம் தொடர்பாகவூம் அமைச்சர் விளக்கமளித்தார். இவ்வருட ஓகஸ்ட் மாதத்திற்குள் அங்கு உற்பததி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வீதி விளக்குகள் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் இ பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடுஇ சூரியசக்தியை பயன்படுத்தி வீதிவிளக்குகளை இயங்கவைக்கும் கொரிய அரசாங்கத்தினூடாக இலங்கைக்கும் இ குறித்த கட்டமைப்பை பெற்றுக்கொள்ள உதவிகளை வழங்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீர்மின்னுற்பத்தியின்போது எஞ்சும் நீரை மீள்பாவனைக்குட்படுத்தும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கும் வழங்குமாறும் அமைச்சர் கொரிய பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![]() |
![]() |
![]() |