ஒளிரும் வடமேல் மாகாணம்.
04 0

Posted by  in Latest News

ஒளிரும் வடமேல் மாகாணம்
அனைவருக்கும் மின் விநியோக திட்டத்தின் கீழ் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் திட்டத்திற்கு அமைய கொழும்பில் மாத்தரமின்றி வெளி இடங்களிலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய 28இ 29இ 30 ஆம் திகதிகளில் வடமேல் மாகாண மக்களை சந்திக்கும் தி;ட்டம் நிறைவூபெற்றது.
அமைச்சரின் விஜயத்தின் முதல்நாளின் போது குருநாகலை பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒளிரும் இலங்கை தி;ட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைச்சர் தன் விஜயத்தின் போது 2010 ஆம் ஆண்டு தாய்க்கி அகி மோட்டோ விருது வென்ற இலங்கை மின்சார சபை மஹவ கிளைக்காரியாலயத்திற்கு விஜயம் செய்தார். அங்கு அமைச்சர் ஊழியர்களை சந்தித்து உரையாடினார்.
குருநாகலை மாவட்டத்தில் மின் பாவனையாளர்கள் எதிர்நோக்கும் கட்டண பட்டியல்இ மின்மானி குளறுபடிஇ வழு குறைந்த மின் விநியோகம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் ஆலோசனை நடாத்தினார். இதன்போது 200 க்கும் அதிகமானோர் தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொண்டனர்.
தற்போது குருநாகலை மாவட்டத்தில் 86 வீதமாகவூள்ள மின் விநியோகத்தை செயற்படுத்த 70.2 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அமைச்சர் பல்வேறு மின் விநியோக திட்டங்களையூம் ஆரம்பித்து வைத்தார்.
மின் பாவனையாளர்களுக்கு செயற்த்திறன் மிக்க சேவையை வழங்குவதற்காக குருநாகலை மின் பொறியியலாளர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நு – ளுhழி மத்திய நிலையத்தை அமைச்சர் தனது விஜயத்தின் 2 ஆவது நாளில் திறந்து வைத்தார்.
அன்றைய தினம் மாவட்டத்தில் சிறந்த மின்விநியோகத்தை வழங்க பிரதேச அரசியல்வாதிகளுடனும் அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பாஇ எஸ்.பீ.நாவின்னஇ பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார உட்பட இலங்கை மின்சார சபையின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதன்போது தெரு விளக்கு முகாமைத்துவம் தொடர்பாக உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் விளக்கம் அளிக்கப்ப்பட்டது. மாலை 7 மணி முதல் காலை 5 மணி வரை தெரு விளக்குகளை செயற்படுத்தவூம் ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சர தனது விஜயத்தின் 3 ஆம் நாளில் புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது மாவட்டத்தின் கிராமிய மின் விநியோக திட்;டம் தொடர்பான முன்னேற்ற அறிக்கையூம் அமைச்சரால் மேற்பார்வை செய்யப்பட்டது. பிரதேச அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தையூம் இடம்பெற்றது. அமைச்சர் அன்றைய தினம் புத்தளம் நுகர்வோர் மத்திய நிலையத்தையூம் திறந்து வைத்தார்.
தற்போது 82 வீதமாகவூள்ள புத்தளம் மாவட்டத்திற்கான மின் விநியோகம் 2012 ஆம் ஆண்டில் 100 வீதமாக வளர்ச்சியடைய மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு அமைச்சர் விளக்கமளித்தார்.
அமைச்சர் ரிதி விகாரைக்கும் விஜயம் செய்து மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.


Leave a comment

* required