இலங்கையில் முதல் சூரியசக்தி உற்பத்தி மின்சாரம் தேசிய முறைமையில்
08 0

Posted by  in Latest News

அன்றாடம் அதிகரித்து வரும் மின்சார கேள்விக்கு இணையாக மின் உற்பத்தி செயற்பாட்டை அபிவிருத்தி செய்யூம் நோக்கில் கொரியா அரசாங்க நன்கொடை மூலம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொன்தொருவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் வலையமைப்பு சூரியமின் சக்தி திட்டம் இன்று (2011.08.08) தினம் மு.ப 10.30 மணிக்கு கௌரவ மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர அவர்கள் ஆகிய அமைச்சர்களின் வரவேற்பில் பாராளுமன்ற மந்திரி நாமல் ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் மக்கள் உரிமைக்கு வழங்கப்பட்டது.
500 கிலோ வோல்ட் திறன் தேசிய மின்சக்தி முறைமையில் சேர்த்து கொள்ளும் முகமாக இணைக்கப்பட்ட சூரிய சக்தி திட்டம் 412 மில்லியன் ரூபா கொரிய அர சநன்கொடை மூலம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொன்தொருவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எப்போதும் மின்சாரம் என்ற கொள்கையின் அடிப்படையில் மீள்புத்தாக்க சக்தி வளம் ஒளிய+ட்டும் முகமாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை ஊடாக இந்த சூரிய மின்சக்தி திட்டம் செயற்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ரணவக்க அவர்கள்…………………………………
இலங்கையில் பிரதான மின் உற்பத்தி வளமான நீர் வளம் அருகி வருவதன் காரணமாக நீர் மின்சக்திக்கு மேலாக இற்றைக்கு பிரதான மூலமாக உள்ளது எரிபொருள் ஆகும். எரிபொருள் மின்சக்தி விலையேற்றம் காரணமாக பதலீடு ஒன்றை நாட வேண்டிய தேவை உள்ளது. அதனடிப்படையில் சூரியமின் சக்தி திட்டம் அமைப்பதன் மூலம் நாளொன்றிற்கு 2300 கி.வோ மின் உற்பத்தி செய்ய முடிவதுடன் வருடாந்தம் இப் பெறுமதி எட்டு இலட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து ஐந்நூறு ஆகும். இத்திட்டம் நிர்மாணிப்பதன் மூலம் எரிபொருள் மின் உற்பத்தி கட்டுபடுத்தப்படுவதுடன் அதனூடாக வருடத்திற்கு 2 இலட்சம் லீட்டர் டீசல் மீதப்படுத்தப்படும். அதேபோல எரிபொருள் பாவனையின் ஊடாக ஏற்படும் சூழல் பாதிப்பு குறைக்கப்படுவதுடன் விடுக்கப்படும் காபன் 300 டொன் தவிர்க்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும் பல யோசணைகள் தெரிவித்த அமைச்சர் அவர்கள்இ
இ.மி.ச ஆடம்பர பொது மக்கள் சேவையை விநியோகிக்கும் நிறுவனமாக நியமிக்க நான் அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதி இன்று நிறைவேறி உள்ளது. 2012 ஆம் ஆண்டில் எல்லோருக்கும் எப்போதும் மின்சாரம் யதார்த்தமாக உள்ளதென அனுமானிக்கப்பட்டுள்ளது. இற்றைவரை அம்பாந்தோட்டை மின்திட்டம் 100மூ நிறைவடைந்துள்ளது. அம்பாந்தோட்டை போல முழு நாட்டிலும் ஏனைய மாவட்டலிலும் 100மூ மின்சாரம் பெற்றுகொடுக்கும் தினம் வெகு தூரத்தில் இல்லை. பிரதான வலையமைப்பில் மின்சாரம் பெற்று கொடுக்க கடினமான பிரதேசங்களில் சூரிய கலங்களை சலுகை விலையில் பெற்று கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மீள் புத்தாக்க சக்தி வளத்தை பயன்படுத்தி 6மூ பெறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் இத்திறன் 20மூ மாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உற்சவத்தில் கலந்து கொண்ட அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற மந்திரி நாமல் ராஜபக்ஸ அவர்கள் சூரியமின் சக்தி திட்டம் அபிவிருத்தி அடைந்துள்ளதன் மூலம் அம்பாந்தோட்டை மாவட்டம் சூழல் பாதிப்பிலிருந்து மீண்டு அலங்காரமடைந்த மாவட்டமாக அமைக்க தாம் சடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அது தொடர்பாக எதிர்காலத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேலும் 600 ஏக்கர் நிலப்பரப்பு பெற்று கொடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இத்திறப்பு விழாவில் கொரிய நாட்டின் ஸானாதிபதி சொய் ஜொன்க் மூன் அவர்களும் இலங்கை நிலைபெறு தகு வலு அதிகார சபை தலைவர் திரு கித்சிறி திசாநாயக்க அவர்களும் உட்பட்ட அம்பாந்தோட்டை அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required