Posted by in Latest News
தேசிய பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு வெளியே நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர் மின் நிலையம் உகண்டாவின் கவிசா கம்பெத்தில் அண்மையில் இடம்பெற்றது. அந்நாட்டு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சைமன் டே உஜங்கா தலைமையில் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக உகண்டா தேசிய மின் கட்டமைப்பிற்கு 18 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படும்.
200 இலங்கையர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர் மின் நிலையத்திற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டது. வி.எஸ். ஹைட்ரோ தனியார் நிறுவனம் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தது.
103 மீற்றர் நீளமாக சுரங்கத்தினூடாக நீர் மின் நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது. 6 மெகாவோட் மின் உற்ப்பத்தி செய்யக்கூடிய 3 டேபைன்கள் இணைக்கப்பட்டுள்ளன. 100 வீதம் இலங்கை தொழில்நுட்பத்தால் நீர்மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது இது உகண்டாவின் மின் நெருக்கடிக்கு பாரிய தீர்வாக அமையூமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சக்தி துறையில் எதிர்நோக்கிய நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய மாற்று திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்தியது. நீர் மூலம் மின் உற்ப்பத்தி செய்யூம் முக்கிய நாடு இலங்கையாகும். அதை ஏனைய நாடுகளிலும் அறிமுகப்படுத்த முடிந்தமை இலங்கை பெற்ற வெற்றியாகும் என மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
![]() |
![]() |
![]() |
![]() |