23 0

Posted by  in Latest News

கண்டியிலுள்ள அனைத்து பொறியியல் காரியாலங்கள் உட்பட இலங்கை மின்சார சபையின் விநியோக பிரிவூகள் ளு – 5  திட்டத்தின் கீழ்……..
மின்சக்தி வலையமைப்பை விரிவூபடுத்தும் நோக்கில்  மின்சார சேவை மத்திய நிலையம் (e-city )  இன்று (2011.02.22) அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் நுகர்வோருக்கு செயற்திறன் மிக்க சேவையை வழங்குவதே புதிய அலுவலகத்தின் நோக்கமாகும்.
மத்திய மாகாணத்தில் இல . 02 கேந்திர நிலையமான குறித்த சேவை மத்திய நிலையத்தில் மின்விநியோகம் இ பொறியியல் மற்றும் வர்த்தக தேவைகளை நிறைவேற்றல்இ நுகர்வோரின்  தேவைகளை ஆராய்தல்இ மின் நுகர்வோர் பட்டியல் பிரச்சினைகளை தீர்த்தல்இ நிலையான மின்விநியோகத்தை மேற்கொள்ளல்இ நுகர்வோரை அறிவூறுத்தல் போன்ற சேவைகளும்  மேலும் பல சேவைகளும் வழங்கப்படும். விசேடமாக மின் இணைப்புக்கான காரணிகளை நிறைவேற்றல் இ மின் தடை தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல் போன்ற சேவைகளும் அங்கு முன்னெடுக்கப்படவூள்ளன. (e-city) அலுவலகத்தினூடாக சரியான ஆலோசனைகளையூம் இசேவைகளையூம் தேவைக்கேற்றாற்போல் நிறைவேற்ற முடியூமென  மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சரியான நேரத்திற்கு மின் கட்டணங்களை செலுத்துவதில் முதலிடம் வகிக்கும் கண்டி மின் வாடிக்கையாளர்களுக்கு பரிசாகவே(e-city) அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மின்சார துறைக்கு கண்டி மக்கள் வழங்கிய சேவைகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். மக்கள் 0812220227 என்ற இலக்கத்தினூடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியூமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.