23 0

Posted by  in Latest News

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மின் விநியோகம் இல்லாத பகுதிகளுக்கு மின் விநியோகிக்க ரன்எலிவெட தி;ட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தினூடாக மின் விநியோக பாதை திட்டமிட்டதன் பின்னர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு புதிதாக மின் விநியோகிக்கப்படும். இது தொடர்பான வைபவம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெறும்.
இதனூடாக அம்பலந்தொடஇ அதுனகொலபெலசஇ பெலியத்தஇ ஹம்பாந்தோட்டைஇ கதிர்காமம்இ கட்டுவனஇ லுனுகம்வெஹெரஇ ஒக்கேவெலஇ தங்கல்ல மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களுக்கு மின் விநியோகிக்கப்படும். இதனூடாக 537 மக்கள் நன்மை பெறவூள்ளனர். 109 வீடுகளுக்கு 60 இலட்சம் ரூபா செலவில் மின்விநியோகிக்கப்படவூள்ளது.