மின்சாரத்தை பாதுகாக்கும் நாடளாவிய செயற்திட்டம்.
01 0

Posted by  in Latest News

மின்பாவனையின்போது தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக மக்களை அறிவூறுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்க மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன் முதலாவது பயிற்சித்திட்டம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று (2011.02.01) காலை 9 மணிக்கு கொழும்பு உலக வர்த்தக மைய கட்டிடத்தில் இடம்பெற்றது.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை இலக்காக கொண்டு பயிற்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மின்பாவனையின்போது பாதுகாப்பான முறைகளை கையாள்வதன் மூலம் கிடைக்கும் அனுகூலங்களை இனங்காண்பதே பயிற்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.   அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களது காரியாலங்களில் மாதம் 15 வீதமான மின்சாரத்தை சேமிக்க முடியூம்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்தேவையை ப+ர்த்தி செய்ய இ மின் உற்பத்திகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்பாவனையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எமது இலக்காகும். அதை வெற்றிகரமாக முன்னெடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மின்சாரத்தை வீண் விரயமாக்குவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் தோன்றும். அதை சேமிப்பதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வூ காண முடியூம். இதனால் எதிர்காலத்தில் இவ்வாறான பயிற்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.  எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமென  அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.