சூறாவளியினால் தெற்கு மின்னகட்டமைப்பில் 119 மில்லியன்கள் நட்டம்.
29 0

Posted by  in Latest News

பாதிப்படைந்த கட்டமைப்பின் மீளமைப்பு பணிகள் ப+ர்த்தி
கடந்த மாதம் தென்மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்றினால் பிரதேச மின்கட்டமைப்புகளிலும் நிலையான மின் நிலைமாற்றிகளுக்கும் சேதம் ஏற்பட்டது. 05 ட்ரான்ஸ் போமர்கள் இ அதிசக்திவாய்ந்த மின்கம்பிகள் நான்கு இ 46 கிலோ மீட்டர்களுக்கு மின்கடத்தும் அதிவலுகொண்ட கம்பிகள் மற்றும் குறைவலுகொண்ட மின்கடத்தி கம்பிகள் என்பன இ1000 கிலோ மீட்டர்களுக்கு முழுமையாக சேதமடைந்தது. சேதமடைந்த முழு கட்டமைப்பையூம் நிலையானதாக மீண்டும் ஸ்தாபிக்க இ.மி.ச 1119.80   மில்லியன்களை செலவிட்டுள்ளது.
குறித்த சூறாவளி தாக்கத்தினால் தென் மாகாணத்திலுள்ள 660 000 குடும்பங்களில் இ 530 000 குடும்பங்களுக்கு முழுமையாக மின்வசதி இல்லாமல் போனது. சேதமடைந்த மின்கட்டமைப்பு மீண்டும் நிலையானதாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது பிரதேச ரீதியாக மின்கட்டமைப்பில் எவ்வித குறைபாடுகளும் இல்லையென இ.மி.சபையின் தென்மாகாண காரியாலயம் தெரிவித்துள்ளது. எனினும் மின்சாரத்தை பெற்றுக்கொண்ட 8 குடும்பங்களிடமிருந்துஇ முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காரியாலயம் குறிப்பிட்டுள்ளது. அது தொடர்பில் தற்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசம் மற்றும் நகரை அண்மித்த பிரதேசங்களில் மின்கட்டமைப்பு ஸ்தீரமான நிலையிலுள்ளது. சோதனையின்போது அகப்படாத கிராமிய வீடுகள் சிலவற்றுக்கு மாத்திரம் மின்சாரம் இல்லாத நிலை காணப்படுவதாக தென்மாகாண இ.மி.ச காரியாலயம் தெரிவித்துள்ளது. மின்பட்டியலில் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்திற்கு தொடர்புகளை ஏற்படுத்தி இ முறைப்பாடுகளை பதிவூசெய்து. முறைப்பாட்டு இலக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு மக்கள் அறிவூறுத்தப்பட்டுள்ளனர்.
071 4260117 இ 071 4260119 மற்றும் 091 2248292 ஆகிய உடனடி முறைப்பாட்டு இலக்கங்;கள் வழங்கப்பட்டுள்ளன. முறைப்பாடுகளுக்கு துரித தீர்வினை பெற்றுக்கொடுக்க பிரதேச மட்டத்தில் விசேட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்;த ஒன்றரை  வார காலப்பகுதியினுள் தென்மாகாண பொறியியலாளர் அலுவலகத்திற்கு மேலதிகமாக கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் விசேட பொறியியலாளர் குழுக்கள் மற்றும் சிவில் சேவைக்குழுக்கள் இ 151 ன் கீழ் அதிகாரிகள் 1000 ற்கும் அதிகமானோர் நியமிக்கப்பட்டுஇ செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளதாக இ.மி.ச குறிப்பிட்டுள்ளது.

Leave a comment

* required