01 0

Posted by  in Latest News

நாடு முழுவதும் உள்ளடங்கும் விதத்தில் எதிர்காலத்தில் நடமாடும் மின்சார சேவை நடத்தப்படும். இதன்மூலம் கிராம நகர மக்களின் மின் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வூ வழங்கப்படும். திட்டத்தின் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பது தொடர்பாகவூம் இ மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பாகவூம் ஆலோசனைகள் வழங்கப்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். களுத்துறையில் மின் பாவனையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வூ வழங்கும் நோக்கில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2011.01.29 ம் திகதி காலை 9 மணி முதல் இ பிற்பகல் 3. மணிவரை அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் பெறும் எண்ணி;க்கையிலான மக்களும் இ மின்சார சபையின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அடுத்த வருடம் நாடு முழுவதும் உள்ளடங்கும் விதத்தில் மின்சார சேவையை பலபப்டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்துகம இஅகலவத்த இ ஹொரணஇ மற்றும் இங்கிரிய போன்ற மலைப்பிரதேசங்களுக்கு இதுவரை மின்விநியோகிக்கப்படவில்லை. அங்கு சூரிய சக்தியை பயன்படுத்தி மின்விநியோகிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதுஇ இலங்கையிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின் விநியோகிப்பதே எமது நோக்கமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.