Posted by in Latest News
![]() |
![]() |
![]() |
நாட்டில் அனைத்து பிரசேதங்களும் உள்ளடங்கும் விதத்தில் எதிர்காலத்தில் நடமாடும் மின் சேவை ஏற்ப்படுத்தப்படும். இதன்மூலம் கிராமியஇ நகர பிரதேச மக்களின் மின் பிரச்சனைக்கு தீர்வூகாண முடியூம். இதனூடாக மின்சாரம் வீண்விரயமாவதை தடுக்கமுடிவதுடன் மின் கட்டணத்தையூம் குறைக்க முடியூமென மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். களுத்துறையில் மின் பாவனையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வூ வழங்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2011.01.29 காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மதுகம பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான மின்சார நுகர்வோர் மத்தியில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் வைபவம் இடம்பெற்றது.
அடுத்த வருடம் முழுநாட்டிற்கும் மின் விநியோகம் வழங்கி அதில் தன்னிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பிரதான கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தை பெறமுடியாத மக்களுக்காக சூரிய சக்தி மூலம் மின் விநியோகிக்கவூம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையில் உள்ள வீடுகளில் குப்பி விளக்குகளுக்கு விடை கொடுப்பதே நோக்கமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.