Posted by in Latest News
எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் கீழ் இலங்கை நிலையான வள சக்தி அதிகார சபை மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் என்பவற்றுடன் இணைந்து சர்வதேச எரிசக்தி முகாமைத்துவ முறை தொடர்பாக நிர்ணயங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2011 ஜீலை மாதம் 20 ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எரிசக்தி முகாமையாளர்கள் மற்றும் எரிசக்தி தொடர்பான ஆலோசகர்கள் இ துறை தொடர்பில் பரந்துபட்ட அளவில் எரிசக்தி பயன்பாட்டு நிறுவனங்கள் இ தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறையினர் 1500 பேரை உள்ளடக்கி விளக்கமளிக்கும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.
எரிசக்தி முகாமைத்துவ வேலைத்திட்டத்தை நிறுவன மட்டத்தில் முன்னெடுக்க ளுடுளு ஐளுழு 50001 சர்வதேச எரிசக்தி முகாமைத்துவ முறை தொடர்பில் வெளிநாட்டு எரிசக்தி முகாமைத்துவ கட்டமைப்புக்களை தெரிந்துகொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்திற்குள் புதிய எரிசக்தி முகாமைத்துவ கட்டமைப்பை தெரிந்துகொள்வதோடு இ அங்கீகரிக்கப்பட்ட எரிசக்தி முகாமைத்துவம் மற்றும் எரிசக்தி வீண் விரயத்திலிருந்து இலங்கை பாதுகாக்கப்படுவதாக நிலையான எரிசக்தி அதிகார சபையினர் சுட்டிக்காட்டியூள்ளனர். அதற்கமைய நிறுவனங்களுக்கு ஏற்படும் 25 மில்லியன் நட்ட ஈட்டை குறைக்க முடியூமென அதிகார சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று அறிமுகப்படுத்தப்பட்டு எரிசக்தி முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு முறைகள் இலங்கையின் தர நிர்ணய சபையினால் ஏனைய நிறுவனங்களுக்கு (ளுடுளு ஐளுழு 50001) எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் அறிமுகப்படுத்த தி;ட்டமிடப்பட்டுள்ளது. குறித்த
துரித மற்றும் நிலையான எரிசக்தி துறை சார் விடயங்களினூடாக எரிசக்தி துறையை பாதுகாக்க முடியூமென சுட்டிக்காட்டபபட்டுள்ளது. உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவையாளர்களின் பிரதிபலிப்புகள் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியூமென இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தலைவர் காஞ்சன ரத்வத்த தெரிவித்துள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டார். முதற்கட்டமாக இந்த கட்டமைப்பை நடைமுறைப்படுத்த 1500 தொழிற்சாலைகள் தெரிவூசெய்யப்பட்டுள்ளதாகவூம்இ சரியான முறையில் திட்டம் முன்னெடுக்கப்படுமாயின் தேசிய மின் கட்டமைப்புக்கு 240 கிகாவோற் மின்சாரத்தை மணித்தியாலத்திற்கு சேமிக்க முடியூமென அவர் சுட்டிக்காட்டியூள்ளார். அதனூடாக வருடாந்தம் 10 பில்லியன் வியாபார இலாபம் கிடைக்கப்பெறுமென அமைச்சர் குறிப்பிட்டார். நாளாந்தம் காணப்படும் 200 மெகா வோற் மின்சார கேள்விக்கு 2980 மெகாவோற் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுஇ பேணப்பட்டு வருகிறது. நீர்மின் உற்பத்தியில் நெருக்கடிகள் காணப்படும் இன்றைய கால கட்டத்தில் தெற்காசிய வலயத்தில் இந்தியாஇ பங்களாதேஸ் இபாகிஸ்தான் இநேபாளம் மற்றும் ப+ட்டான் உள்ளிட்ட நாடுகள் நாளொன்றுக்கு 8-16 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்தி வருவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார். பாவனையாளர்களுக்கு தேவையான அளவூ உயர் வலுவான மின்சாரத்தை வழங்கக்கூடிய நிலை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
SLS ISO 50001 எரிசக்தி முகாமைத்துவ முறை மற்றும் நிறுவனங்களுக்கான எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பான கட்டமைப்பை தௌpவூபடுத்தும் நிகழ்வூ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று 13 ம் திகதி இடம்பெற்றது. நிகழ்வில் இலங்கை நிலையான சக்தி வள அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் கித்சிறி திசாநாயக்க உள்ளிட்ட உயரதிகாரிகள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் இ கலந்துகொண்டதோடுஇ வர்த்தகத்துறையின் பல்வேறு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 ற்கும் அதிகமான முகாமையாளர்கள் இ பொறுப்பாளர்கள் இ கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.