Posted by in Latest News
2011 ஆம் ஆண்டின் முதற்கால அரையாண்டில் 150 மெகாவோட் மின்சாரத்தை உற்ப்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ள மேல் கொத்மலை நீ;ர் மின் நிலையத்தில் முக்கிய இயந்திரங்ளை பொறுத்தும் பணிகள் இடம்பெறுவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் இறுதி பாரிய நீர்மின் நிலையம் மேல் கொத்மலை திட்டமாகும். அங்கு வருடமொன்றிற்கு 10 இலட்சத்து 409 மின் அலகுகளை உற்ப்பத்தி; செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. மின் நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 79 வீதம் நிறைவடைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் நிலையத்திற்கான இயந்திரங்கள் ஜப்பான் ஒப்பந்த நிறுவனத்தினூடாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தேசிய பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் ஜப்பான் நிறுவனம் இயந்திரங்களை பொறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கிணைவாக 220 கிலோவோட் மின்சாரத்தை உற்ப்பத்தி செய்வதற்காக கட்டமைப்பும் நிறைவூ செய்யப்படும். அதற்காக 585 மில்லியன் ரூபா செலவிடப்படவூள்ளது.
திட்டத்திற்காக ஜப்பான் அரசாங்கத்தின் வெளிநாட்டு உதவி பிரிவின் ஊடாக 34 பில்லியன் ரூபா இலகு கடனாக வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உதவிகளுக்கு மேலதிமாக இலங்கை மின்சார சபை 10 பில்லியன் ரூபாவை திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. 1985 ஆம் ஆண்டு ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மேல் கொத்மலை நீர்மின் நிலைய நி;ர்மாணப்பணிக்கான ஆய்வூ மேற்கொள்ளப்பட்டது. 1988 ஆம் ஆண்டு சுற்றாடல் அனுமதியூம் கிடைத்தது. எனினும் பல காரணங்களுக்காக செயற்த்தி;ட்டம் பிற்போடப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டடலின் கீழ் 2006 ஆம் ஆண்டு மின்நிலைய நிர்மாணப்பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. 150 மெகாவோட் மின்சாரத்தை உற்ப்பத்தி செய்யக்கூடிய மேல் கொத்மலை நீர்மின் நிலையம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனைக்கு அமைய 2011 ஆம் வருடத்தில் நிறைவூசெய்யப்படும்.