Posted by in Latest News
![]() |
![]() |
![]() |
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தினூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் பாரிய அனல்மின் நிலைய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவூபெற்றுள்ளன. 900 ஆயிரம் மெகாவோட் உற்ப்பத்தி செய்யக்கூடிய புத்தளம் அனல்மின் நிலையத்தில் முதற்கட்டமாக 300 மெகாவோட் மின்சாரம் உற்ப்பத்தி செய்யப்படும். அதை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவூள்ளது.
நீண்டகாலமாக இழுப்பறி நிலையிலிருந்த புத்தளம் அனல்மின் நிலையத்திட்டம் 2006 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கு உற்ப்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும். மிகவூம் இலாபகரமான முறையில் அனல்மின் நிலையம் தனது உற்ப்பத்திகளை மேற்கொள்ளும். இதன்மூலம் பெற்றௌலியத்திற்காக செலவிடும் பெருந்தொகை பணத்தை மீதப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு உதவமுடியூம்.
அனல்மின் நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் 891 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆரம்பிக்கப்படவூள்ளது. சீன அரசாங்கம்; இதற்காக நிதியூதவி வழங்கியூள்ளது. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பலமான இலங்கை புதிய இலக்கு திட்டத்தின் மூலம் 87 வீதமாக உள்ள மின் விநியோகத்தை 100 வீதம் அதிகரிக்க புத்தளம் அனல்மின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கும்.