Posted by in Latest News
87 வீதமாக உள்ள மின் பயன்பாட்டை 2012 ஆம் ஆண்டில் 100 வீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஒளிரும் இலங்கை திட்டத்தினூடாக 2012 ஆம் ஆண்டு நிறைவில் திட்டத்தை பூர்த்தி செய்யமுடியூமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் மின் விநியோகிக்கப்படுகிறது. கொழும்பு கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 100 வீத மின் விநியோகமும் களுத்துறை 90 வீதமஇ; மாத்தறை 98 வீதம்இ இரத்தினபுரி 88 வீதம்இ காலி 98 வீதம்இ கேகாலை 79 வீதம்இ மொனராகலை 89 வீதம்இ அனுராதபுரம் 73 வீதம்இ பொலன்னறுவை 84 வீதம்இ வவூனியா 68 வீதம்இ கிளிநொச்சி 10 வீதம்இ முல்லைத்தீவூ 16 வீதம்இ யாழ்ப்பாணம் 72 வீதம்இ பதுளை 82 வீதம்இ நுவரெலியா 86 வீதம்இ குருநாகல் 86 வீதம்இ திருகோணமலை 57 வீதம்இ புத்தளம் 90 வீதம்இ மன்னார் 44 வீதம்இ மட்;டக்களப்பு 55 வீதம்இ கண்டி 91 வீதம்இ அம்பாறை 68 வீதம்இ மாத்தளை 84 வீதமென 2010 ஆம் ஆண்டில் மின் விநியோகிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவூ மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் அதிகமான மின்விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
களுத்துறைஇ காலி இ மாத்தறைஇ இரத்தினபுரிஇ கேகாலைஇ அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மின் வசதியற்ற மக்களுக்காக 2011 ஆம் ஆண்டில் மின் விநியோகம் வழங்கப்படவூள்ளது. புத்தளம்இ குருநாகல்இ கண்டிஇ மாத்தளைஇ நுவரெலியாஇ பதுளைஇ மொனராகலை இதிருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறைஇ யாழ்ப்பாணம்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவூஇ மன்னார் மற்றும் வவூனியா ஆகிய மாவட்டங்களில் மின் வசதியற்றௌருக்கு 2012 ஆம் :ஆண்டில் மின் விநியோகம் வழங்கப்படவூள்ளது. ஏனைய பிரதேசங்களில் மின்வசதியற்ற மக்களுக்கு மின்விநியோகம் வழங்கவூம் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவூள்ளன.
இதன்மூலம் அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டம் நிறைவேறும் அறிகுறி காணப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.