மீள்சுழற்சி எரிசக்தியின்றி எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது.
08 0

Posted by  in Latest News

எதிர்கால இலங்கையில் மீள்சுழற்சி எரிசக்தி துறையை வலுப்படுத்தி எரிசக்தி துறையில் திறமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் கீழும் இ இலங்கை மின்சார சபையின் புதிய உறுப்பினராகவூம்இ  வரையறுக்கப்பட்ட இலங்கை எரிசக்தி சபையை உருவாக்குவது மற்றும் புதிய காரியாலய திறப்பு விழா என்பன இ இன்று முற்பகல் 9.24 மணிக்குள்ள சுபவேளையில் இலக்கம் 2ஃ126 பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்றது. தனியார் மற்றும் அரச துறையினர் ஒன்றிணைந்து எதிர்வரும் 2020 ம் ஆண்டளவில் இலங்கையின் மின்தேவையில் 20 வீதத்தை மீள்சுழற்சி எரிசக்தியினூடாக உற்பத்தி செய்ய நீண்ட கால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்று அண்ணளவாக காணப்படும் 250 மெகா வோற் மின்சாரம் இ 2020 ம் ஆண்டளவில் 1355 மெகா வோற்றாக மாற்றமடையூம். 1850 ம் கிறிஸ்து வருடத்தில் கனிய வளங்களின் பாவனை 5 வீதமாக காணப்பட்டது. அது 1960 ம் ஆண்டளவில் 94 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1958 ம் ஆண்டில் உலகின் முதலாவது அணுசப்மெரின் உருவாக்கம் மற்றும் அணுவூலையை உருவாக்கி சிவில் நடவடிக்கைகளுக்காக முதன்முறையாக அதனை பயன்படுத்தியவர் ஐக்கிய அமெரிக்காவின் சிறந்த பொறியியலாளரான ரிக் வோவர் ஆவார். இன்றைய காலகட்டத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் கனிய வளமான கனிய எண்ணெய் இ நிலக்கரி இ எரிவாயூ என்பவற்றுக்கு மேலதிகமாக ஷேல் என்பன 2050 ம் ஆண்டளவில் பொருளாதார மற்றும் சமூக நிலையின் காரணமாக பயன்படுத்த முடியாத வளமாக மாற்றமடையூம். அது வரலாற்று விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான ஒரேயொரு மாற்று வழியாக காணப்படுவது சூரிய ஒளி இ காற்று இ நில அதிர்வூ இ  கடல் அலை இ நீர் மின்உற்பத்தி  இ ஆகிய மீள்சுழற்சி எரிசக்தி துறை  என்பவை மாத்திரமே காணப்படுகின்றது.
கனிய எண்ணெய் இ நிலக்கரி அல்லது ஏனைய எந்தவொரு கனிவளம் தொடர்பிலும் சர்வதேச ரீதியில் தடை ஏற்படுத்தப்படும்போதும்இ இயற்கையான முறையில் கிடைக்கும் மீள்சுழற்சி எரிசக்திக்கு தடை ஏற்படுத்தமுடியாதென அமைச்சர் சுட்டிக்காட்டியூள்ளார். இன்று இலாபமுடைய மின் உற்பத்தி மூலமான  நிலக்கரி இன்னும் 10 வருடங்களுக்குள் உலகில் கூடுதல் செலவில் மின் உற்பத்தி செய்யூம் முறையாக மாறிவிடும். 2017 ம் இ 2020 ம் ஆண்டளவில் குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யக்கூடிய மூலமாக மாற்றம் பெறக்கூடியவை சூரிய ஒளி இ காற்று இ ஆகியவையென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். இந்நிலையில்; 250 மெகாவோற் மின்சாரத்தை  உற்பத்தி செய்யூம் 130 மின் உற்பத்தி நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு இ பிரதான மின்கட்டமைப்போடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இலங்கை மின்சார சபை இ இலங்கை நிலையான சக்திவள அதிகார சபை என்பவற்றுக்கிடையில்
கைச்சாத்திடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இலங்கையின் தனியார் மின்சார நிறுவனங்கள் இ இலங்கை டிரான்ஸ்போர்மர் நிறுவனம் இ உள்ளிட்ட ஏனைய தனியார்  நிறுவனங்கள்இ எரிசக்தி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து நாட்டில் மீள்சுழற்சி எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமென  எஸ் சீ நிந்தெனிய தெரிவித்தார். நிகழ்வில் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம இ அமைச்சின் மேலதிக செயலாளர் டி எம் ஹேரத் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required