கொத்மலை சுரங்கவழிக்கு சுபவேளையில் நீருற்றும் வைபவம்.
19 0

Posted by  in Latest News

எதிர்வரும் மார்ச் மாதமளவில் தேசிய மின்கட்டமைப்புக்கு 150 மெகாவோற் மின்சாரம்
இலங்கையின் நீண்ட சுரங்கவழி நீர்மின் நிலையமாக அமையப்பெற்றுள்ள மேல் கொத்மலை வேலைத்திட்டத்தின் சுரங்கவழிப்பாதைக்கு சுபவேளையில் நீருற்றும்  வைபவம் இன்று (2012.01.17) முற்பகல் 11.20 மணிக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்றது.
இலங்கையின் இறுதி விசாலமான நீர்மின் வேலைத்திட்டமான மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தி நிலைய வேலைத்திட்டத்திற்கு இ நீர் வழங்கும் கொத்மலை ஓயா நீர் இ தலவாக்கலையில் இருந்து 13 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுரங்க வழியாக இ மின் உற்பத்தி நிலையம் வரை 5.9 மீட்டர் உயர சுரங்க பாதையில் கொண்டுவரப்படவூள்ளது. செக்கன் ஒன்றுக்கு 3 கன அடி உயரத்தில் நீர் சுரங்கத்திற்குள் உற்பிரவேசிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் சோதனை நடவடிக்கைகளை நிறைவூசெய்ய வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் திட்டமிட்டுள்ளதோடுஇ 75 மெகா வோற் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளனர். ஜப்பான் இ இலங்கை பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் 27 ம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 150 மெகா வோற்ஸ் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் வைபவம் இடம்பெறவூள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. அதனூடாக 1207.45 மெகா வோற்ஸ் கொண்ட இலங்கையின் மின் கட்டமைப்பு இ 1357.45 மெகா வோற்ஸ் கொண்ட  கட்டமைப்பாக மாற்றம் பெறும்.
இலங்கையில் அதிகரித்துள்ள மின் கேள்விக்கு ஏற்ப இ மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க 2006 ம் ஆண்டு இ 3 ம் மாதம் 3 ம் திகதி சுபவேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இ மஹிந்த சிந்தனைக்கு அமைய இ திட்டத்துக்கான அடித்தளம் இடப்பட்டது. 1998 ம் ஆண்டுஇ தேசிய சுற்றாடல் சட்டமூலத்திற்கு அமைய மேல் கொத்மலை நீர் மின் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றது. குறித்த திட்டத்திற்கு அதிகளவான எதிர்ப்புகள் வெளிவந்த போதும் இ நீதிமன்றம் வரை அது தொடர்பான வழக்கு விசாரணைகள் சென்றடைந்தன. இந்நிலையில் 2000 ம் ஆண்டு மார்ச் மாதம் திட்டத்திற்கான ப+ரண அனுமதி கிடைக்கப்பெற்றது. வருடாந்தம்  409 மெகா வோற்ஸ் மின்சாரத்தை குறித்த நீர்மின் நிலையத்திலிருந்து  உற்பத்தி செய்ய முடியூம்.
நீர்வெளியேறும் பிரதேசம்; 37 மீற்றர் அகலம் இ 130 மீற்றர் நீளமுடைய வகையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. திட்டத்தில் நிலத்துக்கு கீழான மின்நிலையத்தின் நீளம் 66 மீற்றர்களாகவூம் இ அகலம் 19 மீற்றர்களாகவூம் காணப்படுவதோடுஇ உயரம் 36 மீட்டர்களாகும். 18 கிலோ மீற்றர் நீளமுடைய மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக முழுமையாக 220 கிலோ வோற் வலுகொண்ட மின் உற்பத்தியை முன்னெடுக்க முடியூம். வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசாங்கத்தின் வெளிநாட்டு அபிவிருத்தி கடன்கள் ஊடாக நிதி கிடைக்கப்பெற்றுள்ளதோடுஇ வங்கிகளின் ஊடாக 37இ871 மில்லியன் கடன் கி;டைக்கப்பெற்றுள்ளதாகவூம் இலங்கை மின்சார சபையின் 8548 மில்லியன்கள் திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாகவூம் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
திட்டம் காரணமாக பாதிப்புக்களை எதிர்நோக்கி குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 495 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி வேலைத்திட்டத்தின் கொள்கைகளுக்கு அமைய பாதிக்கப்படும் சகலருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்ட நடவடிக்கையின் போது உரிமையாளர்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட வீடுகளுக்கு பதிலாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் சகல வசதிகளையூம் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இ நீர் மற்றும் சிறந்த போக்குவரத்து பாதைகள் இ உள்ளிட்ட வசதிகளோடுஇ அவர்களுக்கான மாற்று வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. 77 மில்லியன்கள் தலாவக்கலை – கொத்மலைக்கு இடையிலான பாலத்தின் நிர்மாண பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. குறித்த பாலம் 80 மீடடர் நீளம் உடையதாகும்.
நெருக்கடிகளின்றி இசகல மின்பாவனையார்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டல் மற்றும்  ஆலோசனைகளுக்கமைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் குழுக்கள் செயற்பட்டுஇ சரியான மற்றும் துரிதமான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றைய தினம் சுரங்கத்திற்கு நீர் ஊற்றும் சுபவேளையில் மின்சக்தி எரிசக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர இலங்கை மின்சார சபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம இ உதவிப்பொது முகாமையாளர் நிஹால் விக்ரமசூர்ய இ மேலதிக உதவிப்பொது முகாமையாளர் மற்றும் மேல் கொத்மலை வேலைத்திட்டத்தின் அத்தியட்சகர் இ  சவீந்திரநான் பெர்ணாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

* required