இலங்கை நிலையான வளசக்தி அதிகாரசபையின் புதிய இணையதளம் இணைப்பு….
22 0

Posted by  in Latest News

எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலைக்கு நிரந்தர தீர்வூகாணும் வகையில் புதிய மாற்றுவழிகள் தொடர்பில் மக்களுக்கு தௌpவூபடுத்தும்  செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்சக்தி எரிசக்தியமைச்சின் இணை நிறுவனமான இலங்கை நிலையான வளசக்தி அதிகாரசபை புதிய இணையத்தளமொன்றை  அறிமுகப்படுத்தியூள்ளது. மின்சக்தி எரிசக்தியமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அது தொடர்பான நிகழ்வூ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள எரிசக்தித்துறை தொடர்பான வேலைத்திட்டங்களின் முழுமையான விபரங்கள் இ வீடியோ காட்சிகள் இபுகைப்படங்கள் என்பன குறித்த இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபை இ  இலங்கை தனியார் மின்னிணைப்பு நிறுவனங்கள் இ கனியவள கூட்டுத்தாபனம் இ இலங்கை மத்திய வங்கி இ தனியார் எரிசக்தி உற்பத்தியாளர்கள் இ எரிசக்தித்துறையில் சிறப்புதேர்ச்சிபெற்றவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு எரிசக்தி;ததுறை தொடர்பில் தௌpவூபடுத்தவூம் இ மக்கள் எரிசக்தி துறைதொடர்பான நாளாந்த செயற்பாடுகளை பார்வையிடவூம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தித்துறை தொடர்பான தகவல்கள் இ வெளியாகும் விதம் இ வருடாந்தம் பயன்படுத்தப்படும் எரிசக்தியின் அளவூ மற்றும் கொள்வனவின்போதான செலவீனங்கள் என்பவற்றை (றறற.iகெழ.நசெபல.பழஎ.டம) இணையத்தளத்தில் பார்வையிடமுடியூம்.
நிகழ்வி;ல் கருத்துதெரிவித்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க….
சாதாரண பொதுமக்களும் எரிசக்தித்துறை தொடர்பில் புதிய தகவல்களை தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் தேசிய பொருளாதார நிலைப்பாடு காணப்படுகின்றது. 2050 ம் ஆண்டளவில் நெருக்கடியின்றி எரிசக்தித்துறையை பயன்படுத்த வேண்டுமாயின் நிகழ்காலத்தில் சிறந்த தொழில்நுட்ப துறையை பயன்படுத்தவேண்டும். மீள்சுழற்சி  எரிசக்தி துறை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தப்படாவிட்டால் 2020 ம் ஆண்டளவில் மின்அலகொன்றின் விலை 60 ரூபாவாக உயர்வடையூமெனவூம்இ அதனை கட்டுப்படுத்த முடியாதெனவூம் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகரித்துள்ள எரிபொருள் விலையதிகரிப்போடு எரிசக்தி துறை தொடர்பான நெருக்கடிக்கு எமது அமைச்சு முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்றுமுதல் மாதாந்த எண்ணெய் பட்டியலில் 10 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனோடு எமது அமைச்சின் எண்ணெய் கொள்வனவில் 10 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். குறித்த  நிகழ்வில்   நிலையான சக்திவள அதிகார சபையின் தலைவர் இ ஆணையாளர் நாயகம் இ  அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் கே.கே.வை.பி பெரேரா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் எரிசக்தியமைச்சின் தொழிற்சங்கத்தினர்  இ அறிஞர்கள் இ வியாபாரிகள் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required