“நாளைக்காக இன்று” மின்சக்தியை பாதுகாக்க தேசிய இயக்கம் முன்னெடுப்பு. மின்சக்தி துறையில் தட்டுபாடு ஏற்பட்டாலும்
21 0

Posted by  in Food

எவ்விதத்திலும் மின் துண்டிப்பிற்கு முகங் கொடுக்க நேராது.
மின்சக்தி துறையில் இன்று மிகவூம் மோசமான நிலையை முகங் கொடுத்துள்ளது. அதற்கு பிரதான காரணம் மின் உற்பத்தி தொடர்பாக ஏற்படும் அதிக செலவூ ஆகும். கேள்விக்கு நிகரான மின்சாரம் உள்ள் போதும் உற்பத்தி தொடர்பாக ஏற்படும் அதிக கிரயம் காரணமாக மின்சார துறை இன்று மிகவூம் சிக்கலை எதிர் நோக்கி உள்ளது. எனினும் இப்பிரச்சினையை தீர்ப்பதில் மின்சார துண்டிப்பை ஏற்படுத்த யோசணை முன் வைக்கவில்லை என கௌரவ மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். அமைச்சர் அவர்கள் அந்த யோசணையை முன் வைத்தது இன்று 2012.03.20  தினம் மின்சார நெருக்டிக்கு நிலையான தீர்வாக மக்களின் அன்றாட பாவனையின் போது சரியான முறையை  அறிவிக்க மின்வலு சக்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட “நாளைக்காக இன்று” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதாகும். பண்டாரநாயக்க தேசிய மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் அவர்கள் சகல ஊடகவியலாளர்களிடமும் கேடடுக் கொ;டது இந்த தேசிய வேலைதிட்டம் தங்கள் ஊடகத்தின் பொறுப்பாக செயற்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
இங்கு  கருத்து வெளியிட்ட அமைச்சர் ரணவக்க அவர்கள்இ
இதுவரையில் 93மூ ஆன மின்சார வசதிகள் பெற்று கொடுக்கப்பட்டு உள்ளன. இவ்வருட முடிவில் 100மூ மின்சாரம் பெற்று கொடுக்க அனைத்து நடவடிக்கைளும் மேற் கொள்ளபட்டு வருகின்றன. ஆசிய கண்ட நாடுகள் எல்லாவற்றிலும் 24 மணித்தியாலமும் மின்சாரம் விநியோகிக்கும் நாடு என பெயரிடப்பட்டு உள்ளது. மின்சக்தி துறை மோசமான நிலையை எதிர் கொண்டுள்ளது என பல அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் எனினும் இது அரசியல் பிரச்சினை ஒன்றல்ல. மின்சார உற்பத்திக்கு அதிக பண விரயமடைவதே காரணமாகும். இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நிலையான தீர்வூ என்னவெனில் மின்சக்தி பாதுகாப்பிற்கு நுழைதலாகும். இதனூடாக மின்சாரத்தை சேமித்து அதிக செலவூடனான டீசல் மின்சக்தியை நிறுத்துதல் முடியூம்;.
விஷேடமாக மாலை 6.30 தொடக்கம் 9.30 வரையான காலப்பகுதியில் மின் பாவனையை குறைக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இலங்கையில் மின்சார நுகர்வோர் ஏறத்தாழ 50 இலட்சம் பேர் இருக்கின்றனர். இதில் 46 இலட்சம் பேர் வீட்டு பாவனையாளர்களாகும். மீதமுள்ளவை தொழிற்சாலைகளுக்கு உரியதாகும். இந்நுகர்வோர் அனைவரும் மாலை 6.30 தொடக்கம் 9.30 வரையான காலப்பகுதியில் 60 வோல்ட் மின்குமிழ் ஒன்றையேனும் அணைப்பதன் ஊடாக 180 வோல்ட் மின்சாரத்தை சேமிக்க முடியூம். அதே போல குளிர்சாதன பெட்டியை 2 மணித்தியாலம் அணைப்பதன ஊடாக 214 வோல்ட் மின்சாரத்தை சேமிக்க முடியூம். இக்காலப்பகுதியில் மின் அழுத்தி பாவனையை குறைப்பதன் ஊடாக 68 வோல்ட் மின்சாரத்தை சேமிக்க முடியூம்.  வீட்டு பாவனையாளர்கள் இந்நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வார்களாயின் அதிக செலவூடனான டீசல் மின்சக்தியை நிறுத்துதல் முடியூம்;. அவ்வாறு நடந்தால் கிரயம் கூடிய டீசல் நிறுவனங்களை முற்றிலும் நிறுத்தி பாரிய பணத்தொகையை மீதப்படுத்த முடியூம். அதே போன்று இந்நிலை நுகர்வோருக்கு  பாரிய நன்மையளிக்கும்.
இது தொடர்பான அவதானத்துடன் இன்று ஆரம்பமான இந்த “நாளைக்காக இன்று” தேசிய வேலைத்திட்டம் எல்லோரினதும் ஒத்துழைப்பு பெறப்படுமானால் தேசிய ரீதியில் மிக முக்கிய அம்சமாக கருதப்படும் என குறிப்பிட்டார்.

Leave a comment

* required