40 லட்சம் பாடசாலை மாணவர்கள் மின்சக்தியை சிக்கனமாக பயன்படுத்துவோமென உறுதிப+ணல்
18 0

Posted by  in Latest News

 1000 மாணவர்கள் இணைந்;துகொண்ட தேசிய வேலைத்திட்டம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில்

 நாளை நிமித்தம்  இன்று வேலைத்திட்டத்தின் கீழ் மின்சக்தியை பாதுகாத்தல் அனைவரினதும் கடமை. மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு
 எமது தாய் நாட்டின் வளர்ச்சிக்காக நாளை நிமித்தம் இன்று மின்சக்தியை பாதுகாப்போமென உறுதியளித்திடுங்கள். கல்வியமைச்சர் பந்துல குணவர்தன மாணவர்களின் வேண்டுகோள்.
‘நாளை நிமித்தம் இன்று’ மின்சக்தியை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தினை பாடசாலை மட்டத்தில் தௌpவூபடுத்திஇ உறுதிமொழி யெடுக்கும் நடவடிக்கையினை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் கல்வியமைச்சு என்பன இணைந்து இன்றைய தினம் முன்னெடுத்துள்ளன. குறித்த தேசிய வேலைத்திட்டம் இன்று காலை 8.00 மணிக்கு அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில்  கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டத்தில் ஆயிரம் மாணவர்கள் இணைந்துகொண்;டனர். இதற்கு மேலதிகமாக காலை 8.15 மணியளவில் நாடளாவிய ரீதியில் காணப்படும் அனைத்து பாடசாலைகளிலும் சுமார் 40 லட்சம் மாணவர்கள் இணைந்துஇ நாளை  நிமித்தம் இன்று மின்சக்தியை பாதுகாப்போம் என உறுதிப+ண்டனர்.
மின்சக்தியை பாதுகாக்கும் உறுதிமொழி இ சிங்கம் இதமிழ்இ ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் இன்றுமுதல் எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கு அனைத்து பாடசாலைகளிலும் வாரமுதல் நாளான திங்கட்கிழமை பாடசாலை ஒன்றுகூடலின் போது எடுத்துக்கொள்ளப்படவூள்ளது.  அது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் சுற்றரிக்கை ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…………..
பிறக்கவூள்ள புதிய எதிர்காலத்தில் எமது பரம்பரையினரே வாழப்போகின்றனர். அவர்களின் சந்தோஷத்திற்காக தேவையான அனைத்தையூம் பெற்றுக்கொடுப்பது  எமது கடமையாகும். அதன் காரணமாகவே நாளை நிமித்தம் இன்று மின்சக்தியை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முனிதனின் அத்தியாவசிய தேவைகளில் 80 சதவீதம் மின்சக்தியின் பயன்பாடு காணப்படுகின்றது.  இந்நிலையில் எதிர்வரும் சில காலங்களில் உலகில் காணப்படும் எண்ணெய் மற்றும் காஸ் வளம் என்பவை முற்றாக தீர்ந்துபோகும் நிலை காணப்படுகின்றது. மேலும்  உலகளில் 1200 பில்லியன் எண்ணெய் பெரல்களே எஞ்சியூள்ளதாகவூம். ஆவற்றில் நாளொன்றுக்கு உலகளாவிய ரிதியில்  90 மில்லியன் எண்ணெய் பெரல்கள் பயன்படுத்தப்படுவதாகவூம் ஆய்வூகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நீடிக்கும் பட்சத்தில் எதிர்கால சந்ததியினருக்கு எம்மால் மின்சக்தியை மீதப்படுத்தி கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.  அதேபோல் எண்ணெய் மற்றும் நிலக்கரி என்பவற்றின் பாவனையால் உலகம் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இவற்றின் பயன்பாட்டினால் 25 வீத உயிர் அழிவூகள் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த 25 வீதத்தில் மனிதனும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே நாளை நிமித்தம் இன்று வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் மாத்திரமின்றி அனைவரும் மின்சக்தியை பாதுகாக்கவேண்டியது கடமையாகும். மாலை 6.30 மணிமுதல் இ இரவூ 09.30 மணிவரையான காலப்பகுதியில் மாணவர்கள் தங்களது வீடுகளில் மின்சக்தியை பாதுகாத்தல் உங்களது பெற்றௌர்களுக்கு மாத்திரமின்றிஇ நாட்டுக்கும்  செய்யூம் பாரிய சேவையாக கருதப்படுகின்றது.  மின்சக்தியை சேமிக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் நாம் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும். இந்நிலையில் இவை தொடர்பில் அவதானமாக செயற்பட்டுஇ உங்களுக்கும்இ உங்களது குடும்பத்தினருக்கும்இ நாட்டுக்கும் உலகிற்கும் மற்றும் எதிர்கால பரம்பரையினருக்குமாக மின்சக்தியை பாதுகாக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட கல்வியமைச்சர்  பந்துல குணவர்தன அவர்கள்……….
எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள அளவை விட, அதிகம் எதிர்பார்த்தார் பாரிய அபாயத்தை சந்திக்க நேரிடும். அதேபோலதான் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள சிறிய மின்வளத்தை பாதுகாத்து ,நீண்டகாலத்துக்கு பாவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எமது அடிப்படைய தேவைகளில் 4 வீதம் மின்சக்தியை அடிப்படையாக  கொண்டது. மனிதன் சம்பிரதாய முறைப்படி ஆதிகாலத்தில் , செலவூ குறைந்த உபகரணங்களையே பாவித்தான் அதேபோல் இன்றைய காலகட்டத்திலும் மாலை 6.30 மணி முதல் , இரவூ  09.30 மணி வரையான காலப்பகுதியில் , வீட்டில் காணப்படும் 60 வொட் பல்பினையேனும் அனைத்து மின்சக்தியை பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும். மேலும் குறித்த காலப்பகுதியில் ஆடைகளை அயர்ன் பண்ணுதல் போன்ற வேலைகளை தவிர்த்துக்கொள்வதோடுஇ குளிரூட்டியினையூம நிறுத்தி வைத்தல் . மின்சக்தியை பாரியளவில் சேமிக்க வழிவகுக்கும்.  மேலும் குறித்த தேசிய வேலைத்திட்டத்தினூடாக 20 பில்லியன் வருமானத்தினை வருடாந்தம் பெற்றுக்கொள்ள முடியூம். மேலும் நாட்டை , தேசத்தை நேசிக்கும் குழந்தைகள் குறித்த தேசிய வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்வது அவசியம்.
(புகைப்படங்கள், மற்றும் குரல்பதிவூ என்பன உங்களால் அனுப்பப்பட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.)
பாடசாலை உறுதிமொழி-
இது எனது தேசம்/எனது நாடு /எனது எதிர்காலத்திற்காக /மின்சக்தி மற்றும் எரிசக்தியை பாதுகாப்பது/எனது  கடமை/ நாளை நிமித்தம் இன்று /அதற்கு நான் துணைபுரிவேன் / தினந்தோறும் /மாலை 6.30 மணி  முதல் / இரவூ 09.30 மணிவரையான /காலத்தில் எனது விட்டில் இருக்கும் /ஒரு பல்பினையேறும் அணைப்பதோடு/ஆடைகளை அழுத்துதல் /போன்றவற்றை தவிர்த்து எப்போதும் /எந்த இடத்திலும் /மின்சக்தியை வீண்விரயமற்ற முறையில் பாதுகாப்பேன்/நாளை நிமித்தம் இன்று / நான் உறுதியளிக்கின்றேன்.

Leave a comment

* required