Posted by in Latest News
சட்டவிரோத மின் பாவனை மூலம் 213 லட்சத்திற்கும் அதிகமான வருமானம். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் குற்றச்செயல்களின்; எண்ணிக்கையில் அதிகரிப்பு.
சட்டவிரோத மின்பாவனையாளர்களை இலக்கு வைத்து இ இவ்வாண்டின் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் 21இ351இ084.47 ரூபா (213 லட்சம்) வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. குறித்த தொகையில் 3இ 917இ729.00 ரூபா (39 லட்சம்) நீதிமன்ற வழக்கு தாக்கல் மூலம் பெறப்பட்டதாகும். 17இ433இ355.47 ரூபா (174 லட்சம்) மின்சக்தி இ எரிசக்தி நிலையத்தில் கணக்கில் காட்டப்படாமல் பெறப்பட்ட வருமானமாகும்.
அதனடிப்படையில் மீட்டர் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியமை இ மின்கம்பியில் கொளுவிகளை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்றுக்கொள்ளல் போன்ற குற்றங்களை மேற்கொண்டமை தொடர்பில் பதிவூசெய்யப்பட்ட 345 குற்றச்சாட்டுக்களில் இ 237 குற்றச்சாட்டுக்கள் வஞ்சனை முறை மூலம் மீட்டர் முறையில் மாற்றங்களை மேற்கொண்டு சட்டவிரோதமாக மின்பாவனையில் இஈடுபட்டமை தொடர்பில் பதிவூ செய்யப்பட்டவையாகும். ஏனைய 108 குற்றச்சாட்டுக்களும் கொளுவிகளை பயன்படுத்தி மின்; கம்பிகளிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக்கொண்டமைக்காக பதிவூ செய்யப்பட்டவையாகும்.
இவ்வருடம் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்ட அவசர சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் 331 சட்டவிரோத மின் பாவனையாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்கள் மூலம் 215 லட்சம் ரூபா வருமானம் மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றிருந்தது. குறித்த குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கையை பெப்ரவரி மாதம் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களுடன் ஒப்பிடுகையில் இ ஜனவரி மாதத்தை விடஇ பெப்ரவரி மாதத்தில் சட்டவிரோதமான முறையில் மின்னிணைப்பை ஏற்படுத்துவொரின் எண்ணிக்கையில்இ சில இடங்களில் குறைவூ ஏற்பட்டுள்ளமை தௌpவாகின்றது. எனினும் உற்சவ காலங்களிலேயே அதிகமான மின்பாவனை பதிவாகின்றது. மேலும் குறித்த காலப்பகுதியிலேயே அதிகளவூ மின்சாரம் சட்டவிரோதமாகவூம் பயன்படுத்தப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை இடம்பெற்று முடிந்த வெசாக் உற்சவ காலத்தில் அதிகளவான மின்சாரம் பாவனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மின்சக்தி எரிசக்தி அமைச்சர் இ குறித்த காலப்பகுதியில் அதிகளவான சட்டவிரோத மின்சார வஞ்சனை நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளமை தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவூம் தெரிவித்தார்.
இதனடிப்படையில் மின்மானி மற்றும் மீட்டர் நடைமறையில் மாற்றங்களை ஏற்படுத்தல் மற்றும் கொளுவிகளை பயன்படுத்தி மின்சாரம் பெற்றுக்கொள்ளல் போன்ற நடைமுறைகள் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அனைத்து தரப்பினரினதும் கவனத்திற்கு கொண்டுவந்த மின்சக்தி எரிசக்தி அமைச்சர் இ குற்றச்செயல்களில் ஈடுபட்டுஇ சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் நபர்களை கண்டுபிடிக்க தம்முடன் இணைந்து செயற்படுமாறு பொறுமக்களிடம் வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார். மேலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெறப்பட்டுஇ பாவனைக்குட்படுத்துகின்றமை தெரியவறும் பட்சத்தில் அது தொடர்பான தகவல்களை இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கங்களான 2422259 எனும் இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.