மின்சக்தி பாதுகாப்பிற்கு வழிகாட்டியதனூடாக மாதாந்த மின்சக்தி பாவனையை 13 வீதத்தினால்  குறைக்க முடிந்துள்ளது.
26 0

Posted by  in Latest News

மின்சக்தி எரிசக்தி அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள  ‘நாளைய தினத்திற்காக இன்று’ மின்சக்தி பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு இணைவாக இ ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைச்சு நாளாந்த செயற்பாடுகளை சரியான முறையில் செயற்படுத்தி.  ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் செலவிடப்பட்ட மின் அலகின் எண்ணிக்கையை 13 வீதத்தினால் குறைக்க முடிந்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் எரிபொருட்களின் விலை அதிகரித்ததோடுஇ இலங்கையிலும் விலை அதிகரிப்பு ஏற்பட்டது. அதனடிப்படையில் மின் பட்டியல் தொடர்பில் எரிபொருள் செலவீனங்கள் அதிகரித்தன.  அது தொடர்பில் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.  இந்நிலையில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இ அமைச்சின் ஒவ்வொரு பிரிவின் தலைவர்களுக்கும் மின்பட்டியல் செலவீனங்களை 10 வீதத்தினால் குறைக்க வேண்டுமென உத்தரவிட்டள்ளார்.
அதனடிப்படையில் அமைச்சின் குளிரூட்டிகளை காலை 10 மணிவரை பயன்படுத்தாமல் இருந்து இ பின்னர் தொடர்ச்சியாக  மாலை 3  மணிவரை பாவனைக்குபடுத்த வேண்டும். பின்னர்  அதன் பாவனையை நிறுத்த வேண்டுமெனவூம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்படாத வகையிலும்இ கடமைகளை முன்னெடுக்கக்கூடிய வகையிலும் மின்குமிழ்கள் அணைக்கப்படவூள்ளன. மேலும் சகல இடங்களிலும் ஒளி ஊடுறுவக்கூடிய வகையில் துளைகளும்இ திரைச்சீலைகளும் போடப்பட்டுஇ முன்மாதிரியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  அதனூடாக மிகவூம் சிறப்பான முறையில் 2012 ஜனவரி மாதம் செலவிடப்பட்ட 17 694 மின் அலகுகளை இ மார்ச் மாதத்தில் 15 347 அலகுகளாக குறைக்க முடிந்துள்ளது.  அதனடிப்படையில் மாதமொன்றில் 2347 மின் அலகுகளை சேமிக்க முடிந்துள்;ளது.  பொறுப்புள்ள அமைச்சு என்ற அடிப்படையில் பாரிய வெற்றியடைந்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு  குறிப்பிட்டுள்ளது.
இந்த நடைமுறையை தொடர்ந்தும் பின்பற்றி இ நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முழுமையான பங்களிப்பை வழங்கி செயற்படுமென  அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர் மற்றும் அலுவலக வாகனங்களை பயன்படுத்தும் அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இதமது எரிபொருள் செலவீனங்களை குறைத்து உதவியூள்ளதாக அமைச்சின் நிதிப்பிரிவூ சுட்டிக்காட்டியூள்ளது.

Leave a comment

* required