மின்சக்தி பாதுகாப்பு தொடர்பாக அரசாங்க ஊழியர்களுக்கு தேசிய நிகழ்ச்சி திட்டம்
15 0

Posted by  in Latest News

கௌரவ அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் இ மின்வலு சக்தி மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் ஒழுங்கமைப்பில் மின்சக்தி பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக மே மாதம் 11 ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் தேசிய நிகழ்ச்சி திட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் திரு.லலித் வீரதுங்க மற்றும் மின்வலு சக்தி அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.சி.பிரதியான்து ஆகியோர் பங்குபற்றினர்.
நாம் மின்சக்தி துறையில் பாரிய அபிவிருத்தியை அடைந்து உள்ளதாக அமைச்சர் அவர்கள் இந்நிகழ்வின் போது குறிப்பிட்டார். “கண்டத்திலேயே முழு நேரமும் மின்சாரத்தை விநியோகிக்கும் ஒரே நாடாக திகழ்ந்துள்ளோம் இவ்வருடத்தினுள் மின்சாரத்தை முழமையாக வழங்கி இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நிகழ்காலம் வரையில் 84மூ மின்சாரம் அனல் மின்சக்தியின் ஊடாக பெறப்படுகிறது. ஆகையால் மின்சார கட்டணத்தின் அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும். எவ்வாறாயினும் நாம் மின்சக்தி பாதுகாப்பின் ஊடாக கட்டணத்தை குறைத்து கொண்டே உள்ளோம். நாம் ஏற்கனவே மின்சக்தி பாதுகாப்பு தொடர்பான தௌpவூபடுத்தலை பாடசாலை மாணவர்களுக்கு இ அரசாங் ஊழியர்களுக்கு. மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கி இருந்தோம். நாம் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையாக செயற்பட்டோமானால் மின்சார கேள்வி தொடர்பான பிரச்சினைக்காக தீர்வை பெறுவது கடினமான விடயமன்று. தற்போது 20 மில்லியன் மக்கள் தொலைபேசி பாவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் மின்சக்தி பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிணைந்தால் பிரமாண்டமாக 200 மில்லியன் வோல்ட் மணித்தியால சக்தியை சேமிக்க முடியூம் என்பது அடையக் கூடிய ஒன்றாகும். என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
நிகழ்கால உலக சனத்தொகை ஏறத்தாழ 7 பில்லியன் ஆகும். “சனத்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் இ எதிர்காலத்தில் மின்சக்தி தொட்பாக நெருக்கடி ஏற்படும் என்பது சாத்தியமாகும். எனவே நாம் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மின்சக்தி பாதுகாப்பு தொடர்பாக செயற்பட வேண்டுமென மேலும் தெரிவித்தார்.
இந்த மின்சக்தி பாதுகாப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து ஜனாதிபதி செயலாளர் திரு.லலித் வீரதுங்க அவர்களால் மின்சக்தி பாதுகாப்பு தொடர்பான சுற்றறிக்கையூம் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் ஒவ்வொரு அரச நிறுவனமும் ஒரு அதிகாரியை மின்சக்தி முகாமைத்துவம் தொடர்பாக நியமிக்க வேண்டும். எனவே அதிகாரி மின் சக்தி தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் குறித்த மாத மின்சார கட்டணத்தில் 10மூ மினசார கட்டணத்தை குறைக்க வேண்டியது அவரின் பொறுப்பாகும். இவ்வழி முறையை செயற்படுத்த மின்வலு சக்தி அமைச்சிற்கு இலங்கை நிலை பெறுதகு அதிகார சபை துணை புரிந்தது. தமது வினைத்திறனை பயன்படுத்தி மின்கட்டணத்தை குறைத்து கொண்ட அதிகாரிகள் தெரிவூ செய்யப்பட்டு விதுல்கா சக்தி பரிசில் வழங்கும் வைபவத்தில் பரிசில்களும் சான்றுகளும் வழங்கப்படும். மின்சக்தி பாதுகாப்பு முறைகளை செயற்படுத்துவதன் மூலம் மின்சக்தி நெருக்கடியை தவிர்க்க முடியூம் என லலித் வீரதுங்க அவர்களும் முடிவில் குறிப்பிட்டார்.

Leave a comment

* required