Posted by in Latest News
25 பேருக்கு சங்கேத பரிசில்கள் வழங்கல் இன்று (31) அடம்பெற்றது.
மக்கள் அர்ப்பணிப்பின் அடிப்படையில்இ கடந்த குறுகிய காலப் பகுதியில் மின்சக்தி துறையில் பாரிய வெற்றியை பெற்று கொண்டுஇ நாட்டில் மின்சார நெருக்கடியிலிருந்து இருந்து நீங்கி செல்வதற்கு எமக்கு வாய்ப்பு கிடைத்தது. – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்
கடந்த 2011 ஆம் ஆண்டு செப்தெம்பர் வரையில் இ.மி.ச நிர்வாகிகளுக்கு எழுந்த பிரதான இலக்கானது 2012 ஆம் ஆண்டு முதல் 06 மாத் காலப் பகுதியில் அதிகரித்த மின்சார கேள்வியை பூர்த்தி செய்தல் ஆகும். அதற்காக இரண்டு முறைகள் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டது. அதிகரித்து வரும் மின்சார கேள்விக்கு நிகராக 100 மெகா வோட் மேலதிக மின்சார திறனை தனியார் துறையிடம் கொள்வனவூ செய்தல் அதில் ஒன்றாகும். அது தொடர்பாக அண்ணளவாக 13இ000 மில்லியன் அல்லது 17இ000 மில்லியன் தொகை செலவாகும் என கணிக்கப்பட்டது. அடுத்த யோசணையானது அதிகரித்து வரும் மின்சார திறன் நடைமுறையில் காணப்படும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பிரதேஷ ரீதியில் மின்சார துண்டிப்பை செய்வதாகும். இக்காரணங்கள் இரண்டும் நாட்டிற்கும்இ பொருளாதாரத்திற்கும்இ பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் முகங் கொடுக்கவிருக்கும் மின்சார நெருக்கடிக்கு முழு நாடும் ஒன்று கூடி நாட்டின் பொதுமக்கள் அர்ப்பணிப்பின் உதவியூடன் அதனை வெற்றி கொள்ள முடியூம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்தார்.
அதற்காக மின்சக்தி பாதுகாப்பு தேசிய வேலைதிட்டம் “நாளைக்காக இன்று” அமுல்படுத்தப்பட்டது. வீட்டு மின்சார பாவனையாளர்களுக்கு கடந்த மார்ச் மாதத்திற்கு ஒப்பாக ஏப்ரல்இ மேஇ ஜூன் மாத மின்சார கட்டணங்களில் ஏதெனும் ஒரு மாத மின்சார கட்டணம் 20மூ குறைந்திருப்பின் ஒரு மாத மின்சாரத்தை இலவசமாக பெற்று கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்விடயத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய 1000 பேர் ஏப்ரல் மாதத்திற்காக தெரிவூ செய்யப்பட்டு இ பரிசில் வழங்கும் வைபவம் இன்று (31) இ.மிச பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. அங்கு 25 பேருக்கு அடையாள பரிசில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் கையில் வழங்கப்பட்டது.
கண்டத்தில் சகல நாடுகளிலும் 08-16 மணித்தியாலங்கள் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்படுகிறது. மின்சார துண்டிப்பு செய்யாது 24 மணி சேரமும் மின்சாரத்தை விநியோகிக்கும் ஒரே நாடு இலங்கை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். தொழிற்சாலைகள் தொடர்பில் விஷால சலுகை வழங்க கூடிய வாய்ப்பு இ.மி.சபைக்கு கிடைத்துள்ளது. உலகில் ஏனைய நாடுகளில் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் பல தினங்களுக்கு துண்டிக்கும் நிலை ஏற்படடுள்ளது. எனினும் இலங்கை தொழிற்சாலைகளுக்கு அவ்வாறான ஓர் நிலை ஏற்படவில்லை. தொழிற்சாலைகளுக்காக பெற்று கொடுக்கப்படும் மின் அலகொன்றின் விலை ரூ9.00 -ரூ12.00 வரையில் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.
வருடத்திற்கு 02 – 03 இலட்சம் நுகர்வோர் சனத்தொகைக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் இந்நிலை அவ்வாறே காணப்பட்டாலும் இ மின்சார கேள்வி 2011 ஆம் ஆண்டில் காணபட்டவாறே தொடர்ச்சியாக நடைமுறைபடுத்தி செல்ல வாய்ப்புள்ளது. இது வரையிலும் அதியூயர் மின்சார கேள்வி காணப்படுவது 2100 மெகா வோட் ஆகும். இந்நிலைக்கு பிரதான காரணம் பொதுமக்கள் மின்சக்தி பாதுகாப்பிற்காக ஒத்துழைப்பு வழங்கியதாகும். அது தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட போட்டிக்கு பங்களிப்பை வழங்கி தங்கள் வீட்டின் மின்சார கட்டணத்தை வினைத் திறனாக்கியவர்களுக்கும் அதே போல அப் போட்டிக்கு பங்களிப்பு செய்யாது மினசக்தி பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்த அனைவருக்கு நன்றி பல பகிர்ந்ததுடன் இ மேலும் மின்சார கட்டணத்தை வினைதிறனாக்க தமது வீடுகளில் நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |