லெகோ நீண்ட கால சேவை தங்க பரிசில் வழங்கல்
13 0

Posted by  in Latest News

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் 25 வருடங்களுக்கு அதிகமான காலம் பூரண சேவை காலத்தை கொண்ட அதிகாரிகளை மரியாதை செலுத்தும் முகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நீண்ட கால சேவை பரிசில் வழங்கல் நேற்று முன்தினம் கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் நடை பெற்றது.

இங்கு இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தில் 25 வருடங்களுக்கு அதிகமான காலம் பூரணமாக சேவையாற்றிய 63 அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்களின் கைகளால் தங்க பரிசில் வழங்கப்பட்டது. இந் நீண்ட கால சேவை பரிசில் வழங்கலை தொடர்ந்து நிறுவனத்தின் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி திறமை பற்றி பாராட்டு இடம்பெற்றது. 2009 ஆம் இடம்பெற்ற தரம் 05 புலமைபரீட்சையில் 144 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பிள்ளைகளுக்கும் மற்றும் 2010 ஆம் ஆண்டு புலமை பரீட்சையில் 148 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பிளளைகளுக்கும் மக்கள் வங்கியில் ரூ.10,000.00 பெறுமதியான சிசு உதான கணக்கு , பரிசுகள் மற்றும் ஞாபகார்த்த சின்னம் வழங்கல் போன்றன அமைச்சர் அவர்களின் கையில் இடம்பெற்றது.

மேலும் 2008,2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் க/பொ/த சா/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் விஷேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு ரூ25,000.00 பெறுமதியான மக்கள் வங்கி கணக்கு மற்றும் மேலும்; பரிசில் வழங்கப்பட்டதுடன், 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில்  க/பொ/த சா/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் மூன்று பாடத்திற்கும் ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு ரூ 50,000.00 பெறுமதியான மக்கள் வங்கி கணக்கு மற்றும் மேலும் பரிசில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மின்வலு சக்தி அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.சி.பிரதினாந்து அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் மற்றும்  லெகோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave a comment

* required