Posted by in Latest News
நாமே அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை மற்றும் மீள் புத்தாக்க மாநாட்டில் அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.
முழு நாடும் இற்றைக்கு முகங் கொடுத்து உள்ள பாரிய சூழல் பிரச்சினைக்கு பிரதான காரணமாக அமைவது எரி பொருள் , நிலக்கரி போன்ற போசில எரிபொருற்களை உபயோகித்தல் ஆகும். நாடுகளின் அபிவிருத்திக்காக தேவையான மின் சக்தி உற்பத்திக்கு அதிகமாக போசில எரிபொருளே உபயோகிக்கப்படுகிறது. இந்த நிலைமையில்எதிர்காலத்தில் மனித வாழ்வூக்கு பாரிய பாதிப்பை எதிர் நோக்க வேண்டி இருக்கும். இது வரையில் இலங்கையில் சாதாரண நிலைமையின் கீழ் கிடைக்க பெறும் மொன்சூன் பருவ மழை இரண்டும் சரியான விதத்தில் கிடைக்க பெறாததால் கடும் வறட்சி நிலையை முகங் கொடுக்க வேண்டி உள்ளது. மொன்சூன் பருவ பெயர்ச்சி மழை சீரற்றதால் இலங்கையின் நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியை எதிர் நோக்கி உள்ளது. இதுவரையில் நாட்டின் அன்றாட மின்சக்தி உற்பத்தியில் நீர் மின் பாவனை 14% வீதத்தில் குறைந்து உள்ளது. மீதமான மின்சக்தி தேவையை எரிபொருள் மற்றும் நிலக்கரி உதவியூடனே பெற்று கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. அதில் அன்றாட மின்சக்தி தேவையில் 86% ஆகும். எதிர்காலத்தில் காணப்பட உள்ள நிலையில் நடைமுறை சூழ்நிலை மற்றும் காலநிலை மாற்றங்களுடன் ஒப்பிடும் போது அதிக நம்பிக்கைவைத்து கொள்ள முடியாததாகும். அதனால் மீன் புத்தாக்க வளத்தை பயன்படுத்தி மின்சக்தி முறைமையை கட்டி எழுப்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன் தினம் நிறைவூ பெற்ற ரியோ+20 தேசிய மாநாட்டில்; உலக தலைவர்களின் அவதானமானது பரவி வரும் அபிவிருத்திக்காக பசுமையான பொருளாதாரம் மற்றும் மீள் புத்தாக்க மின்சக்தி தேசத்திற்கு உள் நுழைதலே நடைமுறைஅவசியம் என்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 2015 தொடக்கம் 2030 வரையான 15 வருட கால பகுதியில் அந்த அபிவிருத்தி நடவடிக்கைக்காக ஒதுக்குதல் தொடர்பான தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்டது. முழு உலகும் சூரிய இ காற்று மற்றும் உயிர் வாயூ போன்ற மீள் புத்தாக்க மின்சக்தியை கட்டி எழுப்பி பசுமையான பொருளாதாரத்தினுற் நுழையூம் போது எமது நாடு அது தொடர்பாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார. மீள் புத்தாக்க மின்சக்pத முறைமைக்கு மாறும் போது பிரதான சிக்கல்கள் இரண்டிற்கு முகங் கொடுக்க நேரிடும். அதில் பிரதான பிர்ச்சினையானது தேவையான நேரங்களில் மின்சக்தி உற்பத்தியை மேற் கொள்ள முடியாததாகும். சூரிய சக்தி உள்ள போது காற்று வலு உள்ள போது மின்சக்தி உற்பத்தி செய்யமுடிந்தாலும் அதனை களஞ்சியபடுத்தி விநியோகிக்கும் போது பாரிய சிக்கலை எதிர் கொள்ள நேரிடும். அதே போல அத் திட்டம் தொடர்பாக ஏற்படும் முதலீட்டு தொகை மற்றும் செயற்படுத்தும் போது ஏற்படும் தொகை அதிகரிப்பின் காரணமாக மின் அலகொன்றின் விலை அதிகரிக்க நேரிடும். எனினும் உலக அளவில் அதிகமாக மீள் புத்தாக்க சக்தியை ஈடுபடுத்தும் போது தொழினுட்ப முறை அதிகரிப்பால் உற்பத்திஅலகுகள் அதிகரிப்பதால் அந்நிலையை குறைத்து கொள்ள வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் பலனை அதிகரிப்பதற்காக மற்றும் பசுமையான மின்சக்தி அதிகமாக பயன்படுத்த தேசிய ரீதியில் பசுமையான நிலையான முறைமையில் (Green International Bank) ஒவ்வொரு கண்டத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் nமைக்க வேண்டி அவசியம் உள்ளதென அமைச்சர் பாட்டலிசம்பிக்க ரணவக்க அவர்கள் இக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பங்கு பற்றிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் சமூக பொருளாதாரம், நிதி மற்றும் அரசியல் நிலையை புரிந்து நாட்டிற்கு பொருத்தமான ,கண்டத்திற்கு பொருத்தமான திட்டம் மற்றும் கொள்கை நிர்மாணங்கள் வெளிநாட்டவர்களுக்கு சமர்பிக்க படவேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் கேட்டு கொண்டார். அதன் அடிப்படையில் தேசிய தொழினுட்ப அறிவின் அடிப்படையில் காணப்பட்ட உடனடி அபிவிருத்தியை நம் நாட்டிற்கு பெற்று கொள்ள முடியூம்.
இன்று (2012.06.25) தினம் கலதாரி ஹோட்டலில் போல்ரூம் அரங்கத்தில் நடைபெற்ற இந்த மீள் புத்தாக்க மின்சக்தி மாநாட்டில்தலைவராக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ரொஹான் செனவிரத்ன அவர்கள் உள்ளிட்ட துறையின் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |