13 0

Posted by  in Latest News

முதற் கட்டத்தில் 1500 தேசிய பாடசாலைகள்தெரிவூ செய்யப்பட்டுள்ளது.

வேலைதிட்டத்திற்காக தன்னியக்க தொலைபேசி இலக்கங்கள் இரண்டு 07 1910 1910 மற்றும் 07 1901 1901.

மின்சக்தி பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கும்இ எதிர்கால சந்ததியினரை உருவாக்க ஒன்று கூடுவோம்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “நாளைக்காக இன்று” மின் சக்தி பாதுகாப்பு தேசிய கண்காணிப்புஇ வீட்டு நுகர்வோரின் அர்ப்பணிப்பில் வெற்றி பெற்று கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதற்காக மின்சார நுகர்வோர் 19 இலட்சம் பேபர் பங்களிப்பு செய்துஇ 84 கிகா வோட் மின்சக்தி திறன் மின்சக்தி முறைமைக்கு மீதப்படுத்தப்ட்டு உள்ளது. அம் மின்சக்தியை எரிபொருள் பயன்படுத்தி உற்பத்தி செய்யதிருந்தால் அதற்காக செலவிட வேண்டிய தொகை ரூ.433 மில்லியன் ஆகும். பொது மக்களின் அர்ப்பணிப்பில் அத்தொகை மீதப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. எமது அடுத்த முயற்சி மின்சக்தி பாதுகாப்பில் அர்ப்பணிப்பு செய்யூம் எதிர்கால பரம்பரையை உருவாக்குவதே ஆகும்.

இன்று வரையில் நாட்டின் மின்சார வசதி 94மூ ஆகும். எதிர்வரும் ஆண்டு வரையில் சகல கிராமங்களிலும் மின்சார செலுத்துகை மார்க்கங்கள் அமைக்கப்பட்டு நிறைவூ பெறும். இன்று மின்சக்தி விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள வாய்ப்பு உள்ள போதும்இ எமது பிள்ளைகளின் எதிர்கால உலகை நோக்கும் போது அது அவ்வளவூ எளிதான விடயமல்ல. எமது சவாலானது நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்சார கேள்வியை பூர்த்தி செய்ய எவ்வாறு அதிகளவூ மின்சார உற்பத்தி செய்வது என்பதாகும். இயற்கை வளமான நீர்மின் வளத்தின் ஊடாக இதுவைரயிலும் நாம் உயர் பயன் பெற்று உள்ளோம். தற்போது அதிகமான மின் சக்தி உற்பத்தி செய்யப்படுவது இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை பயன்படுத்தி ஆகும். உலகில் நடைமுறையில் காணப்படும் எண்ணெய் வளம் பற்றாக்குறையால் நாளுக்கு நாள் எண்ணெய் விலை அதிகரித்த வண்ணமுள்ளது. அடுத்த பதிலீடானது இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதாகும். எனினும் தற்போது நிலவி வரும் காலநிலைக்கமைய நிலக்கரி பாவனை குறுகிய காலத்தினுள் வரையறுக்கும் நிலை எழுந்துள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள மழை சுழற்சியின் வேறுபாட்டினால் கடந்த காலங்களில் பெற்றவாறு நீர் மின்சக்தி பெற முடியாதுள்ளது. இந்த சகல நிலைமைகளிலும் மின்சக்தி மற்றும் சார் ஏனைய சக்திகளை மிகவூம் சிக்கனமாக பாவிக்கும் நிலை எமக்கு எழுந்துள்ளது. அதனால் மின்சக்தி பாதுகாப்பு மனித குலத்தின் செயற்பாட்டிற்கான கட்டாய மற்றும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. எதிர்கால பரம்பரை நவீன உலகிற்கு ஆயத்தப்படுத்த வேண்டியது நமது அனைவராலும் நிறைவேற்றப்பட வேண்டிய பாரிய பொறுப்பாகும்.

அதற்காக எதிர்கால சந்ததியினரை ஆயத்தம் செய்தல் பாடசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியதாகும். அந்த உன்னத சேவையை நிறைவேற்ற மின்வலு சக்தி அமைச்சுஇ கல்வி அமைச்சு ஆகியவை இணைந்து இலங்கை மொபிடல் டெலிகொம் நிறுவனத்தின் அனுசரனையூடன் வேலைதிட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப வைபவம் விடய பொறுப்பு அமைச்சர்கள் இருவரின் தலைமையில்  மற்றும் மொபிடல் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.லலித் த சில்வா அவர்களின் விஷேட பங்களிப்பில் இன்று (13) மொபிடல் பிரதான தலைமையகத்தில் இடம் பெற்றது. “உங்கள் பாடசாலையிலும் வீட்டிலும் பொது சன மின்நிலையமொன்றை அமைப்போம்” எனும் கருப்பொருளில் அமுல்படுத்தப்பட்ட இவ்வேலைதிட்டத்தில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கிடையில் போட்டி இடம் பெறும். அதற்காக தௌpவூபடுத்தல் நிகழ்வூஇ சகல பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் ஊடாக நடத்தப்பட்டது. போட்டிக்காக விண்ணப்படிவம்இ போஸ்டர்இ மின்சக்தி பாதுகாப்பு விபர படிவம் மற்றும் பாடசாலை சத்தியபிரமாணம் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. போட்டிக்கான நிபந்தனைகள் மற்றும் பரிசில்கள் தொடர்பில்  அதில் குறிப்பிப்பட்டுள்ளதுடன் அதற்காக மொபிடல் நிறுவனத்தின் ஊடாக விஷேட உடனடி தொலைபேசி இலக்கங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. 07 1910 1910 மற்றும் 07 1901 1901 ஆகிய இலக்கங்கள் ஊடாக தன்னியக்க சேவையை பெற்று கொள்ள முடியூம். அதற்காக மேலதிக தகவல்களுக்காக www.powermin.gov.lk/hetawenuwenada  இணையத்தளத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியூம்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்…

கடந்த மார்ச் மாதத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை தொடர்பு படுத்தி மின் சக்தி பாதுகாப்பு வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வீட்டு மின்சார பாவனையாளர்களில் எழுபத்தேழு இலட்ச நுகர்வோரில் இருபது இலட்ச நுகர்வோர் எம்முடன் இணைந்தனர். நாம் அவர்களை இணையத்து கொண்டதுஇ பரவந்தப்படுத்தியோ சட்டங்களை அமுல்படுத்தியோ அல்ல. நாம் அளித்த விளக்கத்தில் அவர்கள் தமது மின்சக்தி பாவனையை குறைத்து கொண்டனர். 03 மாத காலப் பகுதியில் 95 கிகா வோட் மின் சக்தியை மீதப்படுத்தினோம். இந்நிலை வருடம் முழுதும் கடைபிடிக்கப்பட்டால் 400 மெகா வோட் மணித்தியாலத்தை அடையலாம்.அதாவது உமது பரிய மின்நிலையமான விக்டோரிய மின் நிலையத்தின் திறன் ஆகும். நீர் மின் பற்றாக்குறை ஏற்பட்டால் நீர் மின்நிலையங்களால் மின் நெருக்கடிக்கு வழிவகுக்க நேரிடும். மேலும் தன்து கருத்தை அமைச்சர் அவர்கள் பாடசாலை மாணவர்களிடையே பாதுகாப்பு முறைமைகளை உட்புகுத்த முடியூம் எனவூம்இ பாசாலை மாணவர்களால்இலகுவில் இம்மின் சக்தி பாதுகாப்பு வேலைதிட்டத்தில் இணைகக முடியூம் எனவூம் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள், இன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நாட்டின் பிரசைகளாக பாரிய தேசிய இலக்காகவேயாகும். அதே போல பெற்றௌர் தமக்கு செல்ல முடியாத இடங்களுக்கு தமது பிள்ளைகளை அழைத்து மின்சக்தி பாதுகாப்பில் தொடர்பில் ஈடுபடுத்துமாறு வேண்டப்படுகிறீர்கள் என குறிப்பிட்டார்;. அதே போல பாசாலையில் நடத்தப்படும் பிரதான மூன்று பரீட்சைகளில் மின்சக்தி பாதுகாப்பு வேலைதிட்டம் தொடர்பில் கேள்விகளை தர தாம் நடவடிக்கை எடுப்பதாகவூம் குறிப்பிட்டார்.