06 0

Posted by  in Latest News

முதல் குழுவில் 468 பேர் தகைமை பெற்றுள்ளனர்.

தெரிவூ செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருட பயிற்சி பாடநெறியூம் இரண்டு வருடம் இ.மி.ச பயிற்சி பெற்று கொள்ளும் சந்தர்ப்பம்.

இலங்கை மின்சார சபையில் மின்சார தொழினுட்ப சேவையாளர்களின் வெற்றிடம் மற்றும் …….. சேவைகளில் பயிற்சியாளர்களை சேர்த்து கொள்வதில் தகைமை மற்றும் திறமைகளுக்கு முன்னுரிமை கொடுத்துஇ எதிர்காலத்தில் தொழினுட்ப பயிற்சியாளர்களை இணைத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் இலங்கை தொழினுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் வழிநடத்தலில் விஷேட மின்சார தொழினுட்ப பயிற்சி பாடநெறி ஆரம்பிக்க புரிந்துணர்வூ ஒப்பந்தம் கையொப்பமிடும் செயற்பாடு இன்று காலை இடம் பெற்றது. புரிந்துணர்வூ ஒப்பந்தத்திற்கு கையொப்பமிடல் மின்வலு சக்தி அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.சி.பிரதினாந்து மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கே.ஏ.திலகரத்ன ஆகிய இருவராலும் இரு அமைச்சர்கள் முன்னிலையிலும் இடம் பெற்றது.

இந்த புரிந்துணர்வூ ஒப்பந்தத்திற்கு அமைய கணித விடயத்தில் காதாரண தர சித்தி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இலங்கை தொழினுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தில் 03 வருடங்கள் விஷேட தொழினுட்ப பயிற்சி பாடநெறியூம் இரண்டு வருடங்கள் இலங்கை மின்சார சபையில் செயன்முறை பயிற்சியூம் பெற்று கொள்ள வாய்ப்பு உள்ளது. பாடநெறிக்காக தெரிவூ செய்தல் பரிட்சை தொழினுட்ப நிறுவனத்தின் ஊடாக இடம் பெறும். இதன் முதல் பாகமாக கொழும்புஇ மட்டகளப்புஇ அனுராதபுரம்இ மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் வாழ் 2457 இளைஞர் யூவதிகளில் 468 பேர் தகைமை பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் வினைத்திறனான அரச சேவை அதே போல திறனான சேவையை பெற்று கொடுக்கும் இலங்கை மின்சார சபையை உருவாக்கஇ திறமை மற்றும் தகைமைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். எதிர்கால அரச சேவையில் முகாமையாளர்கள்இ இயக்க அதிகாரிகள்இ கணக்காளர்கள்இ உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகளை உருவாக்க பாடசாலையிலிருந்து ஆரம்பிக்க தகுந்த வேலைதிட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளது. அதற்காக முன்னுதாரணம் பெற்று கொடுக்க எமது அமைச்சிற்கும் இலங்கை மின்சார சபைக்கும் வாய்ப்பு கிடைப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். இது எதிர்காலத்தில் பலம் வாய்ந்த மின்சக்தி துறையின் திருப்பு முனை என காட்டிக் கொடுத்தார். இலங்கை கிரிக்கட் குழு தமது தேசிய குழுவிற்கு உறுப்பின்ரகளை இணைத்து கொள்ளும் போது தேசிய கிரிக்கட் செயற்குழுவொன்றை நியமித்து அதில் உயர் தகைமை வாய்ந்தவர்களை இக்குழுவிற்கு இணைத்து கொள்வர். அதன் பிரதிபலன் தகைமை பெற்ற அனைவரும்இ இன்று நாம் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் பிரதிபலனாக நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிகு நாடாக மாற்றியமைக்கும் பயணத்தில் திறைமிகு தகைமை வாங்ந்த இளைஞர் குழவினரை உருவாக்க எடுத்த முயற்சி என அமைச்சர் ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.

சபையினரை நோக்கி கௌரவ அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள் இ தொழினுட்ப துறையை கிராமத்திற்கு கொண்டு செல்வதற்காக தசாப்த காலம் கடந்ததாக குறிப்பிட்டார். 1893 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் முதல் தொழினுட்ப கல்லூரி அமைக்க பெற்றாலும்இ இக்கல்லூரி கிராமத்திற்கு சென்றது 1996 ஆம் ஆண்டில் ஆகும். நாட்டின் இளைஞர்களை பலப்படுத்த சாதி மத பேதமின்றி குலம்இ மதம்இ இன பேதமின்றி அரசால் நிறைவேற்ற வேண்டிய பிரதான கடமை என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். மின்சக்தி துறை போன்ற நாட்டின் நாட்டின் சேவை துறையில் முன்னணி கடமை புரியூம் இலங்கை மின்சார சபை இளைஞர்களுக்காக பயிற்சி வாய்ப்பொன்றை பெற்று கொடுக்க முன் வந்துள்ளமை முக்கிய விடயமென அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். திறமை மற்றும் தகைமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து  பலம் வாய்ந்த அரசாங்க சேவையை உருவாக்கி அபிவிருத்தி அடைந்த நாடொன்றை உருவாக்க அரசாங்கம் எப்பொழுதும் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் விடய பொறுப்பு அமைச்சர்கள் இருவரும்இ அமைச்சுகளின் செயலாளர் இருவரும்இ இலங்கை மின்சார சபை தலைவர் டாக்டர் விமல தர்ம அபேவிக்ரமஇ பொது முகாமையாளர் திர.நிஹால் விக்ரமசூரிய அவர்கள்இ தொழினுட் கல்வி மற்றும் பயிற்சி திணைக்கள பணிப்பாளர் பேராசியரியர். சித்ரால் ஜயரத்ன அவர்கள் ஆகியோர் உள்ளிட்ட இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாடநெறியின் முதல் குழவில் தெரிவாகிய மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.