Posted by in Latest News
ரூ. 52.97 மில்லியன் ஒதுக்கீடு
2010 ஆம் ஆண்டில் 70% ஆக காணப்பட்ட பொலனறுவை மின்சாரம் 2011 ஆம் ஆண்டு முடிவில் 75% ஆகியது. இது வரையில் பொலனறுவை மின்சாரம் 82% ஆகும்.
இன்றைய தினம் ரூ.37.76 மில்லியன் செலவில் ,அனுராதபுரத்தில் 265 குடும்பங்களுக்காக மின்சார திட்டங்கள் 05 திறந்து வைக்கப்பட்டது.
மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் வடமத்திய மற்றும் வட மாகாண சுற்று பயணம் நேற்று பொலனறுவை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பொலநறுவை, அனுராதபுரம் மாவட்டம் அதேபோல கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் மின்சக்தி துறையை அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவும் மற்றும் 13 மின் திட்டங்களை திறந்து வைக்கவூம் இச்சுற்று பயணத்தின் நோக்கமாகும். நேற்றைய தினம் பொலனறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் மீகஸ்வெவ, பதொக்வெவ மற்றும் வடிகவெவ மின் திட்டம் அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. எலஹெர, புவக்கஹஉல்பத மின் திட்டம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
ரூ.52.97 மில்லியன் இ.மி.ச நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்திட்டங்கள் 04இன் ஊடாக 590 குடும்பங்களுக்கு ஒளி பெற்று கொடுக்கபட்டது. மெதிரிகரியவில் 250 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்படட மிரிஸ்வெவ மின் திட்டம் தொடர்பாக செலவிடப்பட்ட தொகை ரூ.19.5 மில்லியன் ஆகும். பதொக்வெவ மின் திட்டத்தின் மூலம் நன்மையடையூம் குடும்பங்கள் 110 ஆகும். அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ 10.11 மில்லியன் ஆகும். மெதிரிகிரிய வடிகவெவ மின் திட்டம் ஊடாக நன்மை பெறும் குடும்பங்கள் 80 ஆவதுடன் அதறடகாக செலவிடப்பட்ட தொகை ரூ. 10.28 மில்லியன் ஆகும். பொலனறுவை எலஹெர, புவக்கஹஉல்பத மின் திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 12.7 மில்லியன் மற்றும் பலன் பெறும் குடும்பங்கள் 150 ஆகும்.
இன்றைய தினம் அனுராதபுர மாவட்டத்தில் காடுபுளியங்குளம், பண்டுகாபயபுரம், ரபேவ, மதவாச்சி, மற்றும் தந்திரிமலை பிரதேசங்களில் 265 குடும்பங்களுக்காக ரூ. 37.76 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மின் திட்டங்கள் 04 அமைச்சர் அவர்கள் தலைமையில் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமது பிரதேசங்களில் மின்சாரத்தால் ஒளி பெற்று கொண்ட சந்தோசத்தில் காணப்பட் பொலனறுவை மாவட்டத்தில் மெதிரிகிரிய மற்றும் எலஹெர பிரதேசத்தில் வாழ் மக்களை நோக்கி அமைச்சர் ரணவக்க அவர்கள்…………..
நாம் இப் பிரதேசங்களுக்கு மின்சாரத்தை பெற்று கொடுத்தது நமது சின்னசிறு குழந்தைகளுக்காகும். மின்சார ஒளியில் அவர்களின் கல்வியை வெற்றிகரமாக மேற்கொள்ள தற்போது எங்கள் அனைவராலும் நடவடிக்கை எடுக்க முடியூம். அவ்வாறு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எங்கள் கிராமத்தில் வைத்தியராகவோஇ பொறியிளாலராகவோஇ நீதிபதியாகவோ நியமனம் பெற்று வரும் போது இன்று பெற்ற மின்சாரத்தின் உயர் பலன் பெற்ற மகிழ்வூ கிடைக்கும்.அவ்வாறான எதிர்காலத்தை காண அபிவிருத்தி அடைந்த நாட்டின் பிரஜையாக வரவேண்டுமானால் அந் அபிவிருத்திக்காக தம்மை அர்ப்பணித்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத்திற்கு இந்த மாகாண சபை தேர்தலில் உங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த தேர்தல் நாட்டில் மட்டுமல்ல முழு உலகும் பார்த்து கொண்டிருக்கும் தேர்தலாகும். இந்த சிறிய தேர்தலில் அதிக படியாக உங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறு உங்களிடம் கேட்டு கொள்கின்றேன்.