You are here:

HomeLatest Newsயாழ்ப்பாண தீபகற்பத்திற்கு புதிய அணல் மின்நிலையம்
யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு புதிய அணல் மின்நிலையம்
04 0

Posted by  in Latest News

எதிர்வரும் ஜனவரியில் யாழ்ப்பாணத்திற்கு 24 மெகா வோட் திறன்

இ.மி.ச முதலீடு ரூ.மில்லியன் 4000

தற்போது வடக்கில் 74% மின்சார வசதி

யாழ்ப்பாண தீபகற்பத்தில் மின்சார  விநியோகத்தை நிலைப்படுத்த மற்றும் கிளிநொச்சிஇ சுண்ணாகம் உயர் மின் செலுத்துகை மார்க்கத்தை பலப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்கும் வகையில் 24 மெகா வோட் திறனுடனான மின்சார உற்பத்தியை சகிதமான எரிபொருள் (HFO) மின் நிலையமொன்றை அமைக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் அறிவூரைக்கமைய இந்த மின்நிலையம் யாழ்ப்பாணம் சுண்ணாகம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.

8.6 மெகா வோட் வீதமான எண்ணெய் பயன்படுத்தப்படும் அணல் மின்நிலைய உற்பத்தி பொறிகள் 03 இதற்காக பொருத்தப்பட்டுள்ளது. இ.மி.சபைக்கு சொந்தமான இந்த மின்நிலையம் நிர்மாணிப்பு மற்றும் அமைத்தல் இ.மி.சபைக்கு உரித்தான தேசிய நிறுவனமான லக்தனவி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. முழு திட்டத்திற்காக செலவாகும் தொகை ரூ.மில்லியன் 4000 ஆகும். இதுவரையில் மின் உற்பத்தி பொறி பொருத்துதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. 04 மாதமான குறுகிய காலப் பகுதியில் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு 24 மெகா வோட் மின் திறனை முறைமைக்கு சேர்ப்பதாக லக்தனவி நிறுவனம் அறிவித்தது. 

இதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பிரதான 03 மின் உற்பத்தி பொறிகள் கடந்த சனிக்கிழமை திருகோணமலை துறைமுகம் வரையில் ஹெவி லிப்ட் வகையில் விஷேட கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. யுத்தத்தின் பின்னர் திருகோணமலை துறைமுகத்திற்கு சொந்தமான பாரிய கப்பல் இதுவாகும். திருகோணமலை தொடக்கம் காங்கேஷன்துறை வரையில் பத்தல் ஆதாரத்தின் உதவியில் கொண்டு வரப்பட்ட மின் உற்பத்தி பொறி 03ம் நேற்று  சுண்ணாகம் மின்நிலைய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்றைய தினத்திலே தொழினுட்ப மற்றும் பொருத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்தாக லக்தனவி நிறுவனம் குறிப்பிட்டது. இத்திட்டத்தின் ஊடாக 150 யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு சிறிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்த முடியும். தங்குமிடம்> உணவு> போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் தொழில் வாய்ப்புகள் 100 வரையில் இத்திட்டத்தின் மூலம் உருவாக்க முடியூம் என இ.மி.ச அறிவித்தது.

யாழ்ப்பாண மக்களின் உயர்ச்சிக்காக தொடர்ச்சியான மின்சக்தி விநியோகம் அவசியமாக உள்ளது. அதற்காக அமுல்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் முன்னணி திட்டமாக இது நியமனம் பெற்றுள்ளதாக மின்வலு சக்தி அமைச்சு குறிப்பிட்டது. உற்பத்தி நடவடிக்கை ஆரம்பித்தல் எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதுடன் அதனூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் யாழ்ப்பாண பிரதான மின்சார உபநிலையத்திற்கும்> சுண்ணாகம் கிளிநொச்சி மின் செலுத்துகை மார்க்கத்திற்கும் குறுக்கே கிளிநொச்சி வரையில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் ஊடாக இதுவைரயிலும் 72%  வரையில் காணப்பட்ட வடக்கின் மின்சார வசதி 100% மாக விருத்தி செய்ய வாய்ப்பு உள்ளதாக அமைச்சு அறிவித்தது.