Posted by in Latest News
நாட்டிற்கு அருகே வடக்கில் காணப்படும் பிரதான மின்சார மார்க்கத்திற்கு நெருங்க முடியாத தீவூகள் நான்கிற்கு மீள் புத்தாக்க வளத்தின் ஊடாக 2013 ஆம் ஆண்டு முடிவினுள் மின்சார முறைமை ஒன்றை அமைக்க மின்வலு சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தொழினுட்ப மற்றும் நிதி ஆதாரம் கொரிய அரசாங்கத்தால் பெற்று கொடுக்கப்படும். அதன் அடிப்படையில் டெல்ப், நயினாத்தீவு நாகதீபம், அனலதீவு மற்றும் எலித்தீவு போன்ற தீவுகளில் வாழும் 2967 குடும்பங்களுக்காக மீள்புத்தாக்க மின்சாரம் பெற்று கொடுக்கப்படும்.
இன்று வரையில் இந்நாட்டின் இத்Pவுகளில் குறைந்த மின்சார தேவயை பூர்த்தி செய்து கொள்வது டீசல் மின் பொறி மூலமாகவே ஆகும். அதன் மூலம் டெல்ப் தீவில் 1331 குடும்பங்களில் 293 குடும்பங்களுக்கு (22%) மின்சாரம் கிடைக்கும். நாகதீபத்தில்; 874 குடும்பங்களில் 481 குடும்பங்களுக்கு (55%) டீசல் மூல் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் கிடைக்கும். அதே போல எலித்தீவில் 177 குடும்பங்களில் இதுவரையில் மின்சாம் கிடைத்துள்ள குடும்பங்கள் 80 (45%) ஆவதுடன் அனல்தீவில் 585 குடும்பங்களில் 164 குடும்பங்களுக்கு (28%) இதுவைரயில் டீசல் மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றது.
இன்று காலை டெல்ப் தீவில் விஷேட சுற்று பயணத்தில் இணைந்து கொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மற்றும் இலங்கையின் கொரிய தூதுவர் சொங் ஜொன்க் மூன் அவர்களும் அத்தீவில் நடைபெறும் வேலைதிட்டத்தை கண்காணிக்க சென்றனர். இதுவரையில் டீசல் மின் பாவனையில் கடற்படையின் தலைமையில் நடைபெற்று வரும் ஆடை தொழிற்சாலையை பார்வையிட சென்ற கொரிய தூதுவர் ,மீள்புத்தாக்க சக்தியை பயன்படுத்தி டெல்ப் தீவை பலப்படுத்துவதன் மூலம் உற்பத்தி கிரயம் 25% குறைத்து கொள்ள முடியூம் என குறிப்பிட்டார். அதன் இலாபத்தை அங்கு சேவை புரியூம் 120 சேவையாளர்களுக்கு எதிர்காலத்தில் வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார். இந்த ஆடை தொழிற்சாலையில் கடற்படையினருக்கான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
டெல்ப் தீவில் வாழும் மக்களை சந்தித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் மற்றும் கொரிய தூதுவரால் அசையும் சூரிய சக்தி தொகுதிகள் 25 வழங்கப்பட்டது. அதன் மூலம் வீட்டின் மின்குமிழ் 02 எரியவும் மற்றும் கைதொலைபேசிகளை சார்ஜ் செய்யவும் பயன்படுத்த முடியும். இது குறுங்கால நடைமுறை என குறிப்பிட்டா அமைச்சர் அவர்கள், நாட்டின் பொது மக்களுக்கு சகல தீவுகளிலும் வாழும் நம் சகோதர மக்களுக்கு சகல வசதிகளும் பெற்று கொள்ள உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டார். இந்த தீவுகளில் வாழும் பிரதான முறைமை தொடர்பு படுத்த வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்களுக்கு மின்சார உரிமையை உறுதிப்படுத்த சூரிய சக்தி மற்றும் காற்று வலு பயன்படுத்தி இந்த நான்கு தீவிலும் மீள் புத்தாக்க சக்தியை பொறுத்த இவ்வருடத்துள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். அதற்காக கொரிய அரசாங்கத்தின் தலையிடலில் அவர்களின் தொழினுட்பம் பெற்று கொள்ளல் தொடர்பாக கொரிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மேலும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |