நாடு முழுதும் 05 அணுசக்தி தொழினுட்ப முறைமையை நிர்மாணிப்பு
21 0

Posted by  in Latest News

மேலும் 03 இடங்களில் முறைமையை அமைக்க திட்டம்

இந்தியாவில் கூடங்குலம் மின்நிலையம்> எதிர்வரும் செப்தெம்பர் மாதம் குறித்த செயற்பாடு ஆரம்பிக்கப்படுவதுடன் அதற்கான ஆயத்தங்கள் நாட்டில் இடம்பெறுவதாக அணு சக்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அணு சக்தி பாதிப்பில் இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பும் அல்லது கதரியக்க தாக்கமும் இடம் பெறுமானால் அதற்காக பிரதிபலிப்பை வழங்க அல்லது அவ்வாறான நிலையை வெகு விரைவில் இனங்காண பொருத்தமான முறைமை நிர்மாணிக்க மின்வலுசக்தி அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் அணுசக்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டம் கட்டமாக தேசிய அணு சக்தி பரிதிநிதி நிறுவனங்கள் ஊடாக 72>000 யூரோ (ரூ 12 மில்லியனுக்கு குறையாதவாறு) பெறுமதியான 08 முழுமையான முறைமைகள் பெற்று கொள்ளப்பட்டது. இம்முறைமை இலங்கையில் பொருத்துதல் தொடர்பில் அணு சக்தி அதிகார சபை> அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் இலற்கை கடற்படை ஆகிய மூன்று தரப்பினரும் முப்பரிவு ஒப்பந்தம் ஜூன் 28 ஆம் திகதி கையொப்பமிட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடு முழுதும் காணப்படும் கடற்படை நிலையங்கள் 06> மேல் மாகாணத்தில் மற்றும் மத்திய மலை பகுதியில்> கண்டி பிரதேசத்தில் இந்த அணு சக்தி முறைமை பொறுத்த எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. அதன் பிரதான நிர்வாக மத்திய நிலையம் உருகொடவத்தயில் காணப்படும் இலங்கை அணுசக்தி அதிகார சபையில் செயற்படுத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் இனங்காணப்பட்ட 05 இடங்களில் கதிரியக்க அளவிடல் பொறி பொறுத்தும் நடவடிக்கை நேற்று இடம் பெற்றது. அதன் அடிப்பைடயில் பிரதான நிர்வாக மத்திய நிலையம் இலங்கை அணுசக்தி அதிகார சபையில் பிரதான அலுவலகத்தில் நிர்மாணிக்கவூம்> அக் கட்டிடத்தின் மேல் மாடியில் முதல் முறைமையை பொறுத்தும் நிகழ்வூம் இடம் பெற்றது. இரண்டாம் முறைமை லக் விஜய அணல் மின் நிலைய இடப்பரப்பில் பொறுத்தப்பட்டது. மூன்றாம் பொறி தலைமன்னார் ஊரமலை பிரதேசத்திலும்> நான்காம் மற்றம் ஐந்தாம் பொறிகள் டெல்ப் தீவிலும் மற்றும் காங்கேசன்துறை கடற்படை கேந்திர நிலைய்திலும் பொறுத்தப்பட்டது. எதிர்வரும் காலங்களில் திருகோணமலை மற்றும் காலி கடற் துறைமுகத்தை இலக்காக கொண்டும்> நாட்டின் மத்திய பகுதியில் கண்டியை மத்தியப்படுத்தியூம் அணு அளவிடல் கருவி பொறுத்துவதாக அணு சக்தி அதிகார சபையின் தலைவர் டாக்டர்.ரஞ்ஜித் விஜேவர்தன அவர்கள் அறிவித்தார்.

முறைமை செயற்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகார சபையின் சிரேஷ்ட விஞ்ஞான அதிகாரி திரு.அனுருந்த ஜயலத் அவர்கள் பொறுத்தப்பட்டுள்ள முறைமை> பிரதான நிர்வாக முறைமை உடன் தொடர்புபடுவது தொலைபேசி ஊடாகவே ஆகும் என குறிப்பிட்டார். இச் செயன்முறை 24 மணித்தியாலமும் செயற்படுவதுடன் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுழன்று கதிரியக்க பாதிப்பின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என குறிப்பிட்டதுடன்> இது வரையிலும் இடம் பெற்ற சகல ஆய்வூம் வெற்றிகரமானது எனவூம் குறிப்பிட்டார். இந்நாட்களில் எதிர்வரும் செயற்பாட்டு திட்டம் தயாரிக்கப்படுவதுடன் அதன் அடிப்படையில் மேற் கொள்ள வேண்டிய எடனடி நடவடிக்கை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்> கடற்படை மற்றும் தமது அதிகார சபையின் அதிகாரிகளுக்கு தௌpவுபடுத்தி பயிற்சி வழங்கப்படுவதாகவூம் அவர்கள் குறிப்பிட்டார்.

சர்வதேச அணு முகவர் அனுசரணையில் பெற்று கொடுக்கப்பட்ட இந்த முறைமை பொறுத்துதல் நடவடிக்கை தொடர்பில் அவற்றை நிர்மாணித்த ஜெர்மன் செபிமோ நிறுவன முகாமையாளர் திரு.வோல்ப் ஹேகல் அவர்கள் மற்றும் தொழினுட்ப அறிவுரையாளர் திரு.கிறிஸ்டியன் சைடல் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்து> கடந்த வாரம் தேசிய விஞ்ஞான அதிகாரிகளுடன் நடவடிக்கை மேற்கொண்டனர். 

இந்தியாவில் கூடங்குலம் அணு மிந் நிலையம் எதிர்வரும் செப்தொம்பர் மாதம் அணு உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதன் மூலம் சிறிய அல்லது கதிரியக்க பாதிப்பு இலங்கை ஏற்படுமானால்> அதனை விரைவில் இனங்காணவும்> பொறுத்தப்பட்டுள்ள முறைமை மிகவும் பலன் வாய்ந்தது என  திரு.அனுருந்த ஜயலத் அவர்கள் குறிப்பிட்டார்.

Leave a comment

* required