அம்பாறையில் மின்சாரம் 100% முழுமைப்படுத்த மேலும் 20 மின்சார திட்டங்கள் மாத்திரமே அவசியம்.
22 0

Posted by  in Latest News

இற்றைக்கு மாவட்டத்தில் மின்சாம் 90%

02 நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, தமன, மஹாஓயா மற்றும் பதியதலாவ ஆகிய பிரதேசங்களில் ரூ.156 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், 08 மின் திட்டங்கள் மற்றும் 06 மின் விஸ்தரிப்புக்கள் ஊடாக 1341 குடும்பங்களுக்காக புதிய மின்சார இணைப்பு

அம்பாறையில் தீர்மானிக்க வேண்டியது, இரத்தம் கண்ணீரால் நிரம்பிய மரணத்திற்கு இட்டு செல்லும் மார்க்கத்தை நோக்கி செல்வதா இன்றேல் அரசுடன் இணைந்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி நீர், மின்சாரத்துடன் கூடிய சுக வாழ்வை நோக்கி செல்வதா என்பதையே ஆகும்.

மின்வலு சக்தி அமைச்சர்

பாட்டலி சம்பிக்க ரணவக்க

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசு நடத்தி செல்லும் அபிவிருத்தி செயன்முறைகளுக்கு சார்பாக மின்சக்தி துறை முன்னணி வேலைதிட்டய்களை நடத்தி வருகின்றது. கொடுரமான தீவிரவாதத்திற்கு இலக்காகி இருண்ட யூகத்தில் சிறை கொண்ட அம்பாறை மாவட்டத்தில் அம்பாறைஇ தமனஇ மஹாஓயா மற்றும் பதியதலாவ பதியதலாவ ஆகிய பிரதேசங்களில் ரூ.156 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், 08 மின் திட்டங்கள் மற்றும் 06 மின் விஸ்தரிப்புக்கள் ஊடாக 1341 குடும்பங்களுக்காக புதிய மின்சார இணைப்பு கடந்த 22 மற்றும் 23 ஆகிய இரண்டு தினங்களிலும் திறந்து வைக்கப்பட்டது. மின்சாரம் உரிமை கொண்டதுடன் பிரதேசத்தின் ஏனைய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மற்றும் பொது மக்களின் வாழ்வை வளப்படுத்த முடியூம் என கௌரவ மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.

அமைச்சர் அவர்கள் அம்பாறை மக்களை நோக்கி குறிப்பிட்டது, ஐக்கிய தேசிய கட்சி,  ஜனதா விமுக்தி பெரமுண, மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட வெறித்தனமான அரசியல் பிரதிநிதிகளின் கடமையாக இன்று காணப்படுவது தேர்தல் காலப் பகுதியில் கிராமங்களுக்கு சென்று சுக நலம் விசாரித்து அரசிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதாகும்.  கொழும்பில் சுகம் அனுபவித்து,அம்பாறை அப்பாவி மக்களின் கண்ணீருக்காக இட்டு செல்ல நடவடிக்கை எடுக்கின்றார்கள். இன்னும் சிலர் மீண்டும் நாட்டை பழைய நிலைக்கு இட்டு செல்ல முயற்சி செய்கின்றனர். நீங்கள் தீர்மானிக்க வேண்டியது, அவ்வாறான அரசியல்வாதிகளுக்கு உங்கள் வாக்குகளை வழங்கி இரத்தம் கண்ணீரால் நிரம்பிய மரணத்திற்கு இட்டு செல்லும் மார்க்கத்தை நோக்கி செல்வதா இன்றேல் அரசுடன் இணைந்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி நீர், மின்சாரத்துடன் கூடிய சுக வாழ்வை நோக்கி செல்வதா உன்பதை ஆகும். அதனை நீங்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் யாருக்கு உங்கள் பெறுமதியான வாக்குகளை வழங்குவது என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள் என கௌரவ அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் அம்பாறை மக்களுக்கு காட்டி கொடுத்தார்.

Leave a comment

* required