Posted by in Latest News
இலங்கை அணுசக்தி அதிகார சபை மண் வளப்படுத்தல், நில உற்பத்தி திறன், மற்றும் நில தாழ்வினை சமப்படுத்தல் தொடர்பாக ஆசிய பசுபிக் கண்ட 17 நாட்டு உறுப்பினர்களுடன் சர்வதேச தொடர்பாடல் மாநாடு இன்று (27.08.2012) வரை ஹோட்டல் கலதாரியில் ஆரம்பமானது.
அவூஸ்திரேலியா, பங்கலாதேசம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியன்மார், நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரியா, இலங்கை, தாய்லாந்து, மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பங்கு கொண்டது. இச்செயலமர்வின் குறிக்கோளானது, அணுசக்தி தொழினுட்பத்தை மீதப்படுத்தி நில தாழ்வு, மற்றும் நில பயன்பாட்டு பயிற்சி கட்டுபாடு தொடர்பாக கண்ட ரீதியில் பாதுகாப்பினை ஏற்படுத்த உறுப்பினர்களுக்கு உதவி செய்தல் ஆகும். அணு தொழினுட்பத்தை பயன்படுத்தி இலங்கையின் மத்திய மலைப்பகுதியில் மண்ணரிப்பினை தடுப்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நடைமுறைகளும் அது தொடர்பான விடயங்களும் பரிமாரிக் கொள்ளப்படும்.
மண் பாதுகாப்பு வேலைதிட்டம் தொடர்பாக அபிவிருத்தியை மேற்கொள்ள முன்னணி விவசாய நிலங்களை தெரிவு செய்தல் இந்நிலையில் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஆகவே பிரதேச ரீதியிலான திட்டங்களின் பிரதான குறிக்கோளானது மத்திய மலை பகுதி பிரதேச விவசாய நிலம் மற்றும் தென்னை பயிர் செய்கை நிலங்கள் தொடர்பில் தகவல் வங்கி ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இலங்கையில் மண் வள பாதுகாப்பு சட்டம் செயற்படுத்தபட வாய்ப்பபுள்ளதுடன் அதனூடாக விவசாய நடவடிக்கை முன்னேற்றவும் வாய்ப்பு உள்ளது.
மின்வலு சக்தி அமைச்சின் வழிநடத்தலில் அணு சக்தி அதிகார சபை இத்திட்டத்தின் தேசிய தொடர்புபடுத்தல் நிறுவனமாகவூம் மற்றும் விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள தேசிய வள முகாமைத்துவ நிலையம் மற்றும் தென்னை ஆய்வு நிறுவனம் என்பவை துணை நிறுவனங்களாகவூம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.
இன்று கலதாரி ஹோட்டலில் இடம் பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் அணு சக்தி அதிகார சபையின் தலைவர் டாக்டர் ரஞ்ஜித் விஜேவர்தன அவர்கள் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.